Amit Shah to launch TN BJP chief Annamalai’s padayatra Tamil News: அடுத்தாண்டில் (2024) நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை இன்று மாலை தொடங்க உள்ளார். இதையொட்டி, மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் திடலுக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலையின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். முன்னதாக, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
Advertisment
இந்நிலையில், 'தமிழக பா.ஜ.க நடத்தும் பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறேன்' என்று அமைச்சர் அமித் ஷா தமிழில் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு பா.ஜ.க நடத்தும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் திரு. @narendramodi அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் @BJP4Tamilnadu நடத்தும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்.#EnMannEnMakkal