சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து பாஜக தலைவர் அண்ணாமலை 'போராட்டம் நடத்தினார். மேல் சட்டை அணியாமல், பச்சை வேஷ்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை நடத்தினார்.
இந்நிலையில், அண்ணாமலை தன்னைத் தானே சுழற்றி அடித்துக் கொண்ட சாட்டை கடைசி நேரத்தில் மாறியுள்ளது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தன் வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இதற்காக முதலில் மாரியம்மன் கோயிலில் இருந்து தடிமனான சாட்டை கொண்டு வரப்பட்டது. ஆனால் அண்ணாமலை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் அம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட சற்று லேசான சாட்டையில் அடித்து கொண்டார்.
இந்த நிலையில், சாட்டை கடைசி நேரத்தில் மாறியது குறித்து அண்ணாமலை மீது விமர்சனம் எழுந்துள்ளது. அவர் தன்னைத் தானே அடிக்க பயன்டுத்திய சாட்டை மற்றும் ஏற்கனவே மாரியம்மன் கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தடிமனான சாட்டை ஆடிய இரண்டையும் தற்போது இணையவாசிகள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்கள். மேலும், அண்ணாமலை போலி சாட்டையை பயன்படுத்தியதாகவும் அவர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.