Advertisment

இ.பி.எஸ்-சுக்கு எதிராக பேச்சு: அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு; சிவகங்கையில் பரபரப்பு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் அ.தி.மு.க-வினர் எரிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN BJP Chief Annamalai effigy burnt in Sivaganga AIADMK EDAppadi k. palaniswami Tamil News

பல மாவட்டங்களில் அண்ணாமலையைக் கண்டித்து அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் 'தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்' என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழக எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

Advertisment

இதனைக் கண்டித்து தமிழகம் முழுதும் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல மாவட்டங்களில் அண்ணாமலையைக் கண்டித்து அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் ராஜா தலைமையில் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அண்ணராஜ் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனையடுத்து. போலீசார் அ.தி.மு.க-வினரை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை எரிக்க விடாமல் பறித்துச் சென்றனர். இதனால் அரண்மனை வாசல் பகுதியில் கால் மணி நேரம் பரபரப்பு  நிலவியது. இந்தப் போராட்டத்தில் ஜெ பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஜெ பேரவை மாநில துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

உருவபொம்மை எரிப்பு 

இதேபோல், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷங்களை அ.தி.மு.க.-வினர் எழுப்பினர். மேலும், அ.தி.மு.க நகர செயலாளர் நாகூர் மீரான், ஒன்றிய செயலாளர் கோபி தலைமையில் அ.தி.மு.க-வினர் அண்ணாமலையின் உருவபொம்மையை செருப்பால் அடித்து, எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இளையான்குடி காவல் நிலைய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறித்து சென்றனர். இதனால்   இளையான்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

செய்தி: சக்திசரவணன் - மதுரை மாவட்டம். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Edappadi K Palaniswami Tamilnadu Bjp Aiadmk Sivagangai Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment