தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடந்த 2 நாட்களாக மோதல் முற்றிய நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும், பா.ஜ.க மாநிலத் தலைவரும் ஆர்.என். ரவிக்கு ஆதரவாக களம் இறங்கினர்.
இருப்பினும், இந்த சர்ச்சை மூலம் பா.ஜ.க-வுக்கு உள்ளே ஒரு அமைதியின்மை நிலவுகிறது. இது தந்திரமான ஆரியர் - திராவிடர் விவாத எல்லைக்குள் செல்கிறது. இது தமிழ்நாட்டுக்கு அந்நியர்கள் என்ற முத்திரையை அகற்ற அக்கட்சி மேற்கொண்ட கடின உழைப்பை குறைத்துமதிப்பிடும் என்ற பல அச்சங்களைத் தவிர்க்க கட்சி கடினமாக முயற்சி செய்து வருகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என். ரவி ஆற்றிய உரை தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அடுத்த நாள் பொங்கல் அழைப்பிதழில், தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக 'தமிழக ஆளுநர்' என்று குறிப்பிட்டதோடு, தமிழ்நாடு அரசின் கோபுரம் இலச்சினைத் தவிர்க்கப்பட்டு மத்திய அரசின் நான்முகச் சிங்கம் இலச்சினை இடம்பெற்றதில் இருந்து ஆர்.என். ரவி பின்வாங்கும் மனநிலையில் இல்லை என்பது தெளிவாகிறது.
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பா.ஜ.க இந்தி மொழி பேசும் மாநிலங்களின் கட்சி என்ற பிம்பத்தை அகற்றவும் அதன் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் - குறிப்பாக தென் மாநிலங்களில் (கர்நாடகாவைத் தவிர) மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
ஜெயலலிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டு மறைந்த பிறகு அ.தி.மு.க பலவீனமடைந்து பா.ஜ.க அதன் மீது சவாரி செய்ய உதவியது. பா.ஜ.க தனது தளத்தை விரிவுபடுத்த பிரபல திரைப்பட நட்சத்திரங்களைத் தூண்டியது. அந்த முயற்சிகள் தேர்தல் ஆதாயங்களாக மாறாததால், பா.ஜ.க அதன் எல்லையை அதிகரித்தது. சமீபத்திய உதாரணம் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் ஒரு மாத கால காசி-தமிழ்ச் சங்கமம் மற்றும் தமிழ் மொழி கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் பல தேசிய நிகழ்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மாநிலத்தில் உள்ள கட்சியின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கட்சியின் செய்திகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவருவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார். தமிழ் கலாச்சாரம், தமிழ்நாட்டின் நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை முன்னிலைப்படுத்தவும், மாநிலத்தில் கட்சி பிரச்சாரங்களில் உள்ள மக்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மற்றொரு நடவடிக்கையாக பிற்படுத்தப்பட்ட சாதிகளை - குறிப்பாக வன்னியர்களை நோக்கியதாக உள்ளது. பா.ஜ.க ஒரு உயர் சாதி ஆதிக்கக் கட்சி என்ற பிம்பத்தைத் தவிர்க்கும் நோக்கில் உள்ளது. தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பெரும் செல்வாக்கைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
தமிழக மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர், மாநிலத்தின் பெயரை மாற்ற ரவியின் ஆலோசனையை கட்சியில் உள்ள பலர் ஏற்கலாம் என்று கூறினார். “ஆனால், அதைச் சொல்வதற்கு இது நேரமில்லை. நீங்கள் ஒரு வலிமையான மாற்று கட்சியாக இருந்தால் நீங்கள் அதை சொல்லலாம். நீங்கள் வளர போராடிக் கொண்டிருக்கும்போது சொல்லக்கூடாது.சர்ச்சைக்கு மேல் சர்ச்சைக்கு வழிவகுப்பதற்கு ஆளுநருக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்று தெரியவில்லை” என்று அந்த மூத்த தலைவர் வியந்தார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகளின் அறிவு குறித்து கேள்வி எழுப்பினார். “தி.மு.க-வின் முதன்மைப் போட்டியாளராக அ.தி.மு.க-வுக்கு பதிலாக பா.ஜ.க-வை மாற்றுவது கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்களின் மிகப்பெரிய அரசியல் லாபங்களில் ஒன்றாகும். இப்போது தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் அல்லது தி.மு.க-வுக்கும் மத்திய அரசுக்கும் இடையேதான் மோதல் உள்ளது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே அல்ல. மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது மோதலில்லா அணுகுமுறையால் கூட்டணி கட்சியான அ.தி.மு.க-வுடன் தேவையற்ற மோதல்களை குறைப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், தமிழ்நாட்டின் பெயரை ‘தமிழகம்’ என பெயர் மாற்றம் செய்வது, அல்லது மாநில அரசின் இலச்சினைக்கு பதிலாக மத்திய அரசின் இலச்சினை மாற்றுவது போன்ற ஆர்.என். ரவியின் கருத்துக்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி அடையாளத்தை அழிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்ட மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவரும், ஆர்.என். ரவியும் கட்சியின் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறினார். “ஆளுநரைப் புகழ்ந்து அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் பா.ஜ.க மாவட்டச் செயலாளரால் இன்று தொண்டர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அவற்றில் அண்ணாமலை படம் இல்லை. மற்றொரு மாவட்டத் தலைவர் சட்டசபை சம்பவம் தொடர்பாக ஒரு மாநில அமைச்சரின் வீட்டிற்கு முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இங்கே கட்சித் தலைவர் யார் அண்ணாமலையா அல்லது ரவியா?” என்று அந்த தலைவர் கூறினார்.
தமிழ்நாடு பா.ஜ.க-வுடன் இணைந்து பணியாற்றி வரும் பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: ஆளுநருக்கு அவருக்கான காரணங்கள் இருக்கலாம்… ஆனால், இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கு எங்களைத் தாக்குவதற்கு பெரும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது. மாநில மக்களிடையே உள்ள ஆழமான தமிழினப் பெருமிதத்தை கட்சி புறக்கணிக்க முடியாது என்று எச்சரித்த அவர், இதுபோன்ற சர்ச்சைகள் எங்கள் முயற்சிகளை கெடுக்கும். இங்குள்ள வாக்காளர்கள் வித்தியாசமானவர்கள்.” என்று கூறினார்.
நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, பா.ஜ.க கூட்டணியில் இருந்தபோதிலும், அந்த மாநில அரசையும் அந்நியப்படுத்திவிட்டார் என்பதையும் பா.ஜ.க மூத்த தலைவர் சுட்டிக்காட்டினார். மாநில பா.ஜ.க.வும் அவரது நடவடிக்கைகளால் தங்கள் முயற்சிகளை அழித்ததால் வருத்தம் அடைந்துள்ளது என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.