வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடைப்பயணத்தை தொடங்குகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திருச்செந்தூரில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று காலை நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சில தீர்மானங்கள் முதல்கட்டமாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில், ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை கண்டித்து பாஜக தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது கால்வாய் திட்டம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.