scorecardresearch

தமிழ்நாட்டிற்கு தேவர் தேவைப்படுகிறார்.. அவரின் சித்தாந்தத்தை பாஜக செயல்படுத்தும்.. அண்ணாமலை

பசும்பொன் சென்ற பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தேவரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

TN BJP leader K Anna malai floral tribute to pasumbon Muthuramalinga devar
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மரியாதை

மதுரை மாநகரில் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். முக்கியமான காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் தேவர்.
அவரின் புன்னிய ஆத்மாவுக்கு மரியாதை செலுத்த செல்கிறோம். தற்போது தேவர் மீண்டும் வேண்டும். ஒரு பக்கம் ஆட்சி மற்றும் அதிகாரிகளை பார்க்கிறோம்.

ஆளும் அரசியல்வாதிகள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமென்றாலும் மறைக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது.

மக்களின் உயிருக்கும் உத்ரவாதம் இல்லை என்ற நிலை காணப்படுகிறது. ஆகையால் தமிழ்நாட்டிற்கு தேவர் மீண்டும் தேவை. மேலும் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று தேவர் நினைத்தாரோ அதை பாஜக செயல்படுத்தும்” என்றார்.

தொடர்ந்து பசும்பொன் சென்ற பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தேவரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn bjp leader k anna malai floral tribute to pasumbon muthuramalinga devar