பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "உடுமலைப்பேட்டையில் வசிக்கக்கூடிய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (வயது 52). நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஒரு தோட்டத்து வீட்டில் நடக்கக்கூடிய சண்டை கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து இவர்களுக்கு தகவல் கிடைத்து அங்கு சென்றார்கள். அங்கு இருக்கக்கூடிய நபர்கள் அவரை தாக்கி வெட்டி படுகொலை செய்கிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் தொடர்ச்சியாக காவல் துறையை தாக்குவது அதிகமாகி கொண்டிருக்கிறது. இன்றைக்கு காவல்துறையினுடைய உயிருக்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை.
அப்படி பல அதிகாரிகள் இரவு ரோந்து சொல்கிறார்கள். குறிப்பாக குடிபோதையில் வரக்கூடிய மனிதர்கள், கஞ்சா புழக்கம் அதிகமா இருக்கக்கூடிய நேரத்தில் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள். இன்றைக்கு முதலமைச்சர் அறிக்கையாக கொடுத்திருந்தார்கள். உடனடியாக 30 லட்சம் ரூபாய் முதலமைச்சர் குடும்பத்திற்காக நிவாரணம் வழங்கியுள்ளார். இது முதலமைச்சரின் கடமை அதற்குநன்றி.
முதலமைச்சர் அவர்கள் செய்ய வேண்டியது ஒரு ஒரு காவல் நிலையத்தையும் இன்றைக்கு காலியிடம் ஜீரோ வாக ஆக்கவேண்டும். அடுத்து மூன்று ஆண்டுகளில் ரெக்ரிட்மென்ட் பாலிசியை முதல்வர் அறிவித்து 10,000, 15,000, 20,000 என வருடத்திற்கு எத்தனை காவலர்கள் நியமிக்க முடியுமோ அத்தனை பேரையும் நியமிக்க வேண்டும். சப் இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு நியமித்து காவல்துறையில்
ஜீரோ வேகன்ஸி என கொண்டு வர வேண்டும். இது முதலில் நாம் செய்யக்கூடிய கடமை.
காரணம் என்னவென்றால் இரவு ரோந்துக்கு செல்ல கூடியவர்கள் தனியாக செல்லாமல் இரண்டு பேராக செல்ல வேண்டும். அடுத்தது எல்லா காவல்துறை சரகத்தில் இருக்கக்கூடிய எல்லா இடத்திற்கும் நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் நல்ல பேட்ரோல் வண்டிகள் தேவை வேகமாக போகக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள் காவல்துறையில் மாட்டக்கூடிய பாடி கேமரா, பேசர்கள் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தாலும் கூட ஆயுதத்தை பயன்படுத்தக்கூடிய அனுமதி ரூத்துக்கு செல்லும்போது சைடில் ஆயுதம்இருக்க வேண்டும். இவருக்கு 52 வயது இரவு நேரம் தனியாக சோதனை செய்ய சென்றுள்ளார் .
இது எல்லாம் சரி செய்ய வேண்டும்.மூன்றாவது காவல்துறையினுடைய குறைநிறை இன்றைக்கு புதுப்புது மாவட்டத்தில் உருவாக்குகிறோம் ஆனால் எத்தனை காவல் நிலையங்கள் புதிதாக உருவாக்குகிறோம். இன்றைக்கு காவல் நிலையங்களில் எல்கைகள் பறந்து விரிந்து உள்ளது இரண்டு மணி நேரம் போகக்கூடிய காவல் நிலையங்கள் உள்ளன. இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் தனியாக ஒரு ஆணை பிறப்பித்து டிஜிபி அவர்களை அறிவுறுத்தி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களின் இல்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும். புதிதாக காவல் நிலையம் உருவாக்க வேண்டும் காவல்துறை மீது இருக்கக்கூடிய பணிச்சுமையை குறைக்க வேண்டும்
ஒரு பக்கம் நாம் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எளிதாக கடந்து விடுகிறோம். ஆனால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டுமென்றால் சட்டம் ஒழுங்கை ஒழுங்காக பாதுகாக்க கூடிய காவல்துறைக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும், மேன்பவர் டெக்னாலஜி இருக்க வேண்டும். இது எல்லாம் செய்தால் அடுத்த இன்னொரு காவல்துறை அதிகாரியின் உடைய சிப்பந்தியோ அதிகாரியோ காவலரோ, சப் இன்ஸ்பெக்டரோ அவர்களுடைய உயிர் பறிபோக கூடாது காரணம் இவர்கள் நமக்காக பணி செய்து நமக்காக உயிர் விடுகின்றார்கள்.
அவர்களை பாதுகாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு மீடியாக்களுக்கு உள்ளது, மக்களுக்கு உள்ளது இதை மீடியோ நண்பர்களும் இதை ஆக்கபூர்வ விவாதமாகமாற்றி அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவல்துறைக்கு தேவையான எல்லா வசதிகளையும் நீங்கள் கொண்டு வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு அதிகமான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. மூன்று விஷயம் ஒன்று. சாராயம் ஆறாக ஓடுகிறது. எல்லா இடத்தில் இன்றைக்கு குடிப் பழக்கம் அதிகமாகி விட்டது. டாஸ்மாஸ்க் மூலம் மதுவை அரசு விற்பனை செய்கிறது. இது ஒரு பக்கம் போதை பழக்கம் என்பது பணக்காரர்களிடம் இருக்க வேண்டிய விஷயம். இன்றைக்கு நடுத்தர மக்களைத் தாண்டி ஏழை மக்களை நோக்கி போதை வந்துவிட்டது. ரொம்ப சீப்பாக இருக்கிறது சிந்தடிக் டிரக் மூன்றாவது நாம் காவல்துறை பற்றி பேசி விட்டோம்.
இன்றைக்கு அரசு இரும்பு கரத்தோடு இந்த அடிக்சன் ஆல்கஹாலை குறைக்க வேண்டும். டாஸ்மாக்கை வழிமுறை படுத்த வேண்டும். அரசு இரும்பு கரத்தை கொண்டு போதை வஸ்துக்களை, டிரக்ஸ் எல்லாம் இரும்பு கருத்தை கொண்டு அடக்க வேண்டும். இன்றைக்கு அனைத்து வழக்குகளும் சின்ன பசங்கள் ரோட்டுக்கு அருவாய் எடுத்துக்கொண்டு வருகிறார்கள் கஞ்சா பழக்கம் ரவுடிகள் கொலை செய்கிறார்கள் 14 வயது பையன் அறிவால எடுத்து வெட்டி இருக்கிறான் அதனால் இதை எல்லாம் சரி செய்தால் சமுதாயமாக நாம் பிழைக்க முடியும்" என்று அவர் கூறினார்.