Advertisment

'முதலமைச்சரின் திடீர் தேச பக்தி வியப்பளிக்கிறது' - அண்ணாமலை

வரும் காலங்களில் தேசியத்தின் வளர்ச்சி தமிழகத்தில் அதிகரிக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
75th Independence day, Anna malai criticize MK Stalin

பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை

பிரிவினைவாதத்தை பற்றி நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் திமுக எம். பி ஆர்.ராசா முதல்வர் பேசியதை நாடே பார்த்தது. முதலமைச்சர் திடீரென தேசபக்தி பற்றி பேசுவது வியப்பு அளிக்கிறது என தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை பாஜக ஆளாத அரசு கூட வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது., ஸ்டாலின் அரசு என்ன செய்திருக்கிறது.

பாஜகவிற்கு திடீரென தேச பக்தி வந்திருக்கிறது என முதல்வர் கூறுவது., கண்ணாடி சுவருக்குள் உட்கார்ந்து கல் எடுத்து இன்னொருவர் மீது எறிவது முன்பு அவர் கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து இருக்கிறார் என்பதை உணர வேண்டும்" என்றார்.

Advertisment

தொடர்ந்து செருப்பு வீசுவது., சிலைகளை அவமானப்படுத்துவது தான் பாஜகவின் உடைய ஆயுதம் என துரைமுருகன் கூறியது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு.?

"பாஜக இதுவரை எந்த ஒரு சிலைகளையும் சேதப்படுத்தவில்லை, பாப்பிரெட்டிப்பட்டியில் பாரத அன்னை என்ற ஆலயம் அமைத்து அதை திறப்பதற்கு அனுமதி பெற்று ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்துவதற்காக சென்று கோவிலை திறக்கும் போது அரசு அதிகாரி அங்கு இல்லை. அனுமதி இல்லை யெனமறுக்கப்பட்டு இருந்தால் பாஜகவினர் உள்ளே சென்றிருக்க மாட்டார்கள்.

தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டு பாஜகவின் கூட்டத்தை கண்டு திமுகவினர் அச்சப்படுவர். முறையாக அனுமதி பெற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகள் இருந்திருந்தால் அசம்பாவிதம் எதுவும் நடைபெற்று இருக்காது.

நேற்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு பாஜக சார்பில் அனுமதி பெற்று கலந்து கொண்டேன். கைது செய்யப்பட்ட கேபி.ராமலிங்கத்திற்கு கைது என்பது புதிது அல்ல இது போன்ற கைதுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி அஞ்சப் போவதில்லை" என்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாகத்தான் பாஜகவில் சேர்ந்தேன் என சரவணன் கூறியது குறித்த செய்தியாளர் கேள்விக்கு.

இது குறித்து எனக்கு தெரியாது.? யார் தலைமை.? யார் அழுத்தம் கொடுத்தார்கள்.? யார் அதை செய்ய சொன்னார்கள் என்பது எனக்கு தெரியாது.? இது பற்றி சரவணன் தான் சொல்ல வேண்டும்.? முன்னாள் மதுரை பாஜக மாவட்ட தலைவர் கட்சியை விட்டு சென்ற பிறகு அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன் அவர் தேர்ந்தெடுத்த பாதை ஒன்றும் புதிதல்ல அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.?

2017 ஆம் ஆண்டு ராமநாதபுரத்திற்கு நிர்மலா சீதாராமன் தேசியக்கொடி பொருத்தப்பட்ட காரில் சென்ற பொழுது திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் காரில் கல்லை எறிந்தார்கள். அப்போது திமுக என்ன கூறினார்கள் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள் என தெரிவித்தனர்.

பாஜகவினரின் நேற்று செய்த செயலால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீது பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர் கேள்விக்கு.?

அரசியல் கட்சிகளில் தலைவர் சரியான வழியில் நடக்காத போது குறிப்பாக நேற்று நிதியமைச்சர் சரியாக நடக்காத போது தொண்டர்களுக்கு உணர்ச்சிகள் வரத்தான் செய்யும். தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது தலைவருக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவர்.

தொண்டர்களுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தவறினார்கள் நேற்று அதுதான் நடந்தது. இதனால் பாஜக சார்பில் தொண்டர்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது அவர்களது தவறுகளை திருத்திக் கொள்ள இது ஒரு பாடம்.

தமிழக மக்கள் கொடியேற்றுவது குறித்த கேள்விக்கு.?

தமிழகத்தின் மிகப்பெரிய அளவிற்கு தேசியம் உள்ளது., அதற்காக வீட்டுக்கு வீடு தேசியக்கொடி ஏற்றி தான் தேசியத்தை காக்க வேண்டும் என்ற கோட்பாட்டாடை நான் மறுக்கிறேன்., அது என்னுடைய கருத்தும் கூட.

தேசியக்கொடி ஏற்றுவதன் மூலமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு, இளைஞருக்கு, வயது குறைவானவர்களுக்கு ஒரு பாரம்பரியத்தை ஊட்டி வளர்க்கக்கூடிய நிலை உள்ளது.

இதுவே தமிழகத்தில் கிராம., பட்டி தொட்டி எங்கும் தேசத்தினுடைய ஒற்றுமையை நிலை நாட்ட தேசிய கொடி வைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியது. பிரிவினைவாதத்தைப் பற்றி பேசக்கூடிய திமுக போன்ற கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டி உள்ளனர் தமிழக மக்கள் எப்போதும் தேசியத்தின் பக்கம் தான் உள்ளனர்.

தமிழக மக்களுக்காக மத்திய அரசு 25 லட்சம் கொடி கொடுத்துள்ளது. எந்த அரசியல் கட்சியை இதுவரை கொடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார்.?

வரும் காலங்களில் தேசியத்தின் வளர்ச்சி தமிழகத்தில் அதிகரிக்கும். பாஜக என்றும் தொண்டர்கள் பக்கம் தான் தொண்டர்களால் இயங்கக்கூடிய கட்சி பாஜக என்றார்.

செய்தியாளர் செந்தில் குமார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Annamalai Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment