விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்துக்கு 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டையை உலுக்கி உள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த நபர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், கள்ளச் சாராய மரணங்ளை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து மே 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் @BJP4Tamilnadu வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.
இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“