ஈரோடு இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்து வருகிறது.
ஈரோட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "பாஜக கட்சியின் கருத்து பற்றி, ஒரு வேட்பாளர், மக்கள் மன்றத்திற்கு தெரியும். அதை அனைவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களிடம் கலந்துரையாடி வருகிறோம். திமுகவை எதிர்த்து பாஜகவின் வேட்பாளர் வெற்றிப்பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
எங்களது கூட்டணியில் அதிமுக பலத்துடன் இருக்கின்றனர். 2024ஆம் ஆண்டு வரக்கூடிய தேர்தலுக்கு நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், தற்போது ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை", என்று தெரிவித்திருக்கிறார்.