கேரளாவில் பா.ஜ.க-வின் தொலைக்காட்சியாகக் கருதப்படும் ஜனம் டிவியின் நீட்டிப்பாக, தமிழில் செய்தித் தொலைக்காட்சி தொடங்க தமிழக பா.ஜ.க திட்டமிட்டுளது. பா.ஜ.க தொலைக்காட்சி தொடங்கும் திட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பா.ஜ.க மாநிலத்தில் கட்சிக்காக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்க திட்டமிட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் பா.ஜ.க-வின் ஆதரவு தொலைக்காட்சியாகக் கருதப்படும் ஜனம் டிவியின் நீட்டிப்பாக தமிழில் தொலைக்காட்சி தொடங்கும் திட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழில் தொடங்கப்படும் டிவி சேனலின் பெயரும் பெரும்பாலும் ஜனம் டிவி என்ற பெயரிலேயே இருக்கும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். “இந்த டிவி அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும். இதற்கு ஆரம்ப செலவு சுமார் 15 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் வளங்களைப் பயன்படுத்தி இயக்கப்படும்” என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
மேலும், “அண்ணாமலை இந்த தொலைக்காட்சி திட்டத்தை மேற்பார்வையிடுவார். ஏப்ரல் 14, 2023 முதல் அவரது மாநிலம் தழுவிய பாதயாத்திரையின் விரிவான கவரேஜை வழங்குவதே இந்தத் திட்டத்திற்கான முக்கியக் காரணம்,” என்று அந்த பா.ஜ.க தலைவர் கூறினார்.
“அண்ணாமலை திட்டத்தை மேற்பார்வையிடுவார். ஏப்ரல் 14, 2023 முதல் அவரது மாநிலம் தழுவிய பாதயாத்திரையின் விரிவான கவரேஜை வழங்குவதே இந்தத் திட்டத்திற்கான முக்கியக் காரணம்,” என்று தலைவர் மேலும் கூறினார்.
குறைந்த ஊதியம், வணிக ரீதியாக நீடிக்க இயலாத மாதிரி போன்ற பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், சபரிமலை சர்ச்சையின் போது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரச்சார முயற்சிகளில் கேரளாவில் ஜனம் டிவி முக்கிய பங்கு வகித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"