Tamil Nadu Budget | Thangam Thennarasu: 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து அவர் உரையாற்றி வருகிறார். மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும் என்றும், புதிதாக அகழாய்வு நடைபெறும் இடங்கள் குறித்தும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், "கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ. 17 கோடி செலவில் அமைக்கப்படும்.
சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும். முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும். 65 லட்ச ரூபாய் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.
இதன் மூலம் நாட்டிலேயே அகழாய்வுக்கு பட்ஜெட்டில் அதிகத் தொகை ஒதுக்கிய மாநிலமாக தமிழநாடு திகழ்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“