தமிழ்நாடு அரசின் மொத்த கடன், வருவாய் மற்றும் பற்றாக்குறை எவ்வளவு?

2024-25-ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.49 ஆயிரத்து 278.73 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2024-25-ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.49 ஆயிரத்து 278.73 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Thangam Thenna
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நேற்று (பிப். 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையை தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. அதோடு தமிழ்நாடு அரசின் கடன் விவரம், நிதி வருவாய் மற்றும் பற்றாக்குறை ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisment

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,  மாநில அரசின் சொந்த வரி வருவாய் 2023-24-ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளின்படி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 147.24 கோடியாக மதிப்பிடப்பட்டது.

2024-25-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இது ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 172.99 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2025-26-ம் ஆண்டில் ரூ.2.26 லட்சம் கோடியாக இருக்கும்.

2024-25-ம் ஆண்டில் வருவாய் செலவினங்கள் ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 288.72 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24-ம் ஆண்டைவிட 9.70 சதவீதம் அதிகமாகும். ஊதியச் செலவினங்களுக்காக ரூ.84 ஆயிரத்து 931.60 ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பயன்களுக்கான 2024-25-ம் ஆண்டுக்கான மதிப்பீடு ரூ.37 ஆயிரத்து 663.56 கோடியாக இருக்கும். முந்தைய ஆண்டுகளில் வாங்கப்பட்ட பொதுக் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டித் தொகை அதிகரித்தபடி உள்ளது. 2024-25-ம் ஆண்டில் வட்டி செலுத்துவதற்கான செலவினம் ரூ. 63 ஆயிரத்து 722.24 கோடியாக இருக்கும். 2024-25-ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.49 ஆயிரத்து 278.73 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதல், திரும்பச் செலுத்துதல் ஆகியவை மதிப்பிடப்பட்டுள்ளன.  

அதன்படி 2024-25-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 584.48 கோடி அளவிற்கு மொத்த கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே 31.3.2025 அன்று தமிழகத்தில் நிலுவையில் உள்ள கடன் ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்து 361.80 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 26.41 சதவீதமாகும்"  என்று அவர் கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamilnadu budget

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: