/indian-express-tamil/media/media_files/2Urxtzdsg9CdDyYZK5lT.jpg)
'சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்' - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
Tamil Nadu Budget | Thangam Thennarasu:2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து அவர் உரையாற்றி வருகிறார். மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
சிங்காரச் சென்னை-2
இந்நிலையில், சிங்காரச் சென்னை-2 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், "சிங்காரச் சென்னை-2 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்.
இதேபோல், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.