‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில், அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் உயர்க்கல்வி படிக்க மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 360 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 3 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் உயர்கல்விக்காக மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு 2024 பிப்ரவரி 19-ம் தேதி 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் உயர் கல்விக்காக அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ. 1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 19- தேதி சட்டப்பேரவையில் தாக்கல் தாக்கல் செய்த நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைத் தொடர நிதியுதவி அளிக்கும் வகையில், புதிய திட்டம் வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.
இந்த லட்சிய திட்டம் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், ரூ. 360 கோடி செலவில் செயல்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்கான அவர்களின் கனவுகளை நனவாக்கி சாதனையாளர்களாக மாற்ற இந்தத் திட்டம் உதவும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இந்த நிதி உதவி அவர்களின் கல்வி செயல்திறனை மேம்படுத்த பாடப்புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை வாங்க உதவும் என்று கூறினார்.
வரும் ஆண்டில் 1 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ. 2,500 கோடி கல்விக் கடன்கள் அளிக்க அனுமதிக்கப்பட்டு வழங்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இது மாணவர்களின் கல்வி இலக்குகளை நிறைவேற்றுவதோடு, அவர்களின் பெற்றோருக்கு ஏற்படும் நிதிச்சுமையையும் குறைக்கும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும், வரும் ஆண்டில் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ. 200 கோடி செலவில் புதிய திறன் ஆய்வகங்கள் நிறுவப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் போது 1,000 விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 7,500 உதவித் தொகையும், தேர்வில் தேர்ச்சி பெற்றால் ரூ. 25,000 ஊக்கத் தொகையும் வழங்கும் திட்டத்துக்கு வரும் ஆண்டில் ரூ. 6 கோடி ஒதுக்கப்படும் என்றும் அமைச்ச தங்கம் தென்னரசு கூறினார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 2.73 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் ரூ. 1,000 நிதியுதவி வழங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: உயர்கல்வியில் முதலாம் ஆண்டு பெண் மாணவர்களின் சேர்க்கை இந்த ஆண்டு 34% அதிகரித்துள்ளதாகவும், இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு கூடுதலாக 34,460 மாணவிகள் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“