/indian-express-tamil/media/media_files/2025/03/14/wY2Gm2r6fuGyQPloffJk.jpg)
தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளைத் தொகுத்து தருகிறோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லார்க்கும் எல்லாம் எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு பட்ஜெட் 2025, தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது” என்று பெருமிதம் கூறியுள்ளார்.
எல்லார்க்கும் எல்லாம் என்ற முழக்கத்தை முன்வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட்டை வெறும் வெற்று அறிவிப்பு என்று விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிவிப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து இங்கே தொகுத்து தருகிறோம்.
👩 மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்
— M.K.Stalin (@mkstalin) March 14, 2025
💪 ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்
👩💻 இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்
🏭 தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்
🏙️ புதிய நகரம்
🛫 புதிய விமான நிலையம்
💧 புதிய நீர்த்தேக்கம்
🚆 அதிவேக ரயில்… pic.twitter.com/ViQg6AdEmJ
தமிழ்நாடு பட்ஜெட் 2025 குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவிக்கையில், “விளிம்புநிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் உட்பட அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லார்க்கும் எல்லாம் எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு பட்ஜெட் 2025, தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க அரசு அறிவித்துள்ள பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டுக்கான நிதிநிலை அறிகையை தாக்கல் செய்த நிலையில், தி.மு.க அரசு அறிவித்துள்ள பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறுகையில், “தி.மு.க அரசு அறிவித்துள்ள பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது. தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பு நடைமுறையில் பல திட்டங்களுக்கே கடன் வாங்கித்தான் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் நிலையில் எப்படி புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள்?” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் குறித்து இல்லை, கல்வி கடன் ரத்து குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்துவதாக தெரிவித்தார்கள் அது இடம் பெறவில்லை. நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதாக தெரிவித்திருந்தனர் அதுவும் இடம்பெறவில்லை. சமையல் எரிவாயு மானியம் வழங்குவதாக தெரிவித்தனர் அதுவும் இடம்பெறவில்லை.” எடபாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை, பா.ஜ.க மாநிலத் தலைவர்
சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது தி.மு.க என்று தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,
— K.Annamalai (@annamalai_k) March 14, 2025
தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.
ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள்…
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. தி.மு.க-வுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக.” என்று விமர்சித்துள்ளார்.
இரா. முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து பகுதி மக்களுக்குமான நிதிநிலை அறிக்கையாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வரவேற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், “2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மிகச்சிறப்பான முறையில் சமர்பித்திருக்கிறார். பொதுவாக இந்த நிதிநிலை அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது, பாராட்டுகிறது. குறிப்பாக திருக்குறள் 193 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் என்பது ஒரு நல்ல செய்தி. கல்விக்குரிய தொகை ரூ.2,150 கோடியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதி தரப்படும் என்று ஒன்றிய அரசு பிடிவாதம் காட்டும் நிலையில், நீங்கள் தராவிட்டாலும் இங்கே இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் உறுதியாக இருக்கிறோம் என்று பேரவையில் நிதியமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்ககது. பாராட்டத்தக்கது.
அதே போல, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கான நிதி ரூ.3,796 கோடியை பல மாதங்களாக ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று குறிப்பிட்டு, அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஒன்றிய அரசு காழ்ப்புணர்ச்சியைக் காட்டாமல் உடனடியாக வழங்க வேண்டும். ஏனென்றால், தமிழ்நாடு முழுவதும் இந்த பணியில் ஈடுபட்ட கிராமப்புற விவசாயத் தொழிலாளிகள் மற்றும் பெண்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்க முடியவில்லை. பணிகளையும் தொடங்க முடியவில்லை. எனவே பேரவையில் நிதி அமைச்சர் கேட்டுக்கொண்ட அடிப்படையில் இந்த தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.