ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசே முடிவே செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இன்று மாலை கூடும் அமைச்சரவையில் இது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளது தமிழக அரசு. 2014ம் ஆண்டு, இந்த ஏழு நபர்களையும் விடுதலை செய்யக் கோரி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை எப்போது?
27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்களின் விடுதலையை ஆளுநருக்கு பரிந்துரை செய்ய இருக்கிறது தமிழக அரசு. ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அது தொடர்பான செய்தியைப் படிக்க
புதுவை முதல்வர் நாராயண சாமியின் கருத்து
நேற்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் நாராயண சாமி. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரின் விடுதலைப் பற்றி கேள்வி கேட்ட போது, அவர்கள் விடுதலை செய்வதைப் பற்றி அரசு பரிசீலனை செய்வது தவறு இல்லை என்று கூறினார். மேலும் அவர்கள் விடுதலை குறித்து முன்பே பரிசீலனை செய்யலாம் என்று ராகுல் காந்தி கூறியதையும் மேற்கோள் காட்டிப்பேசினார்.