Advertisment

சாதியை மத அடையாளத்துடன் கலக்கும் பா.ஜ.க: தமிழகத்திற்குள் நுழைய புதிய உத்தி

சாதிய அடையாளத்தை மத அடையாளத்துடன் உறுதிப்படுத்துவதும், ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதும் தமிழகத்தில் பா.ஜ.க-வின் முக்கிய உத்தியாக பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
TN caste with faith BJP strategy for Lok Sabha Polls 2024

உண்மையில், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை இந்துத்துவா சித்தாந்தத்திற்கு கடந்த காலத்தில் திராவிடக் கட்சிகள் எதுவும் ஆதரவளிக்கவில்லை.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Nadu | Bjp | Lok Sabha Election 2024: சென்னை - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் கோபேன் கண்ணாடி தொழிற்சாலையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சிறிய அலுவலகம் நடத்தி வரும் ஜோதி பாண்டியன் மற்றும் சிவகுமார் ஆகிய இரு இளைஞர்கள், தங்களது பக்கத்து தொகுதியான வேலூர் மக்களவை தொகுதி எம்.பி.யும், தி.மு.க வேட்பாளருமான டி.எம்.கதிர் ஆனந்த் மீண்டும் எம்.பி-யாக தேர்தெடுக்கப்படுவதை விரும்பவில்லை. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Blending caste with faith, BJP tries to open a space in Tamil Nadu

49 வயதான கதிர் ஆனந்த், தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க கட்சியின் பொதுச்செயலருமான துரை முருகனின் மகன் ஆவார். 1971 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்தில் நுழைந்த அவர் இதுவே 10 முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். ஆனால் இந்த நேரத்தில், அவரது மகன் கதிர் கடுமையான போரை எதிர்கொள்கிறார். அதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது போராட்ட வேட்பாளரும் மாநில பா.ஜ.க தலைவருமான கே அண்ணாமலை மாநிலத்தில் கட்சியின் இமேஜை எவ்வாறு மாற்றினார் என்பது தான். 

தமிழக அரசியல் சூழலில் அதிகம் பேசப்படும் கட்சியாக பா.ஜ.க-வும், தவிர்க்க முடியா தலைவராக அண்ணாமலையும் உருவெடுத்துள்ளனர். "நாங்கள் வன்னியர்கள், எங்கள் வாக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைந்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு (சின்னம்: மாம்பழம்) தான்.  நான் தனிப்பட்ட முறையில் நம்புவது, வன்னியர்கள் வளமாக இருக்க வேண்டும். இந்து மதம் வாழ வேண்டும், வளர வேண்டும்" என்று அவர் கூறுகிறார்

வன்னியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்களுக்கு இடஒதுக்கீடு கோரும் பா.ம.க நிறுவனத் தலைவர் எஸ்.ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது இது முதல் முறையல்ல. 2019 மக்களவை மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் அவர்கள் இருந்த அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க அங்கம் வகித்தது. 

வட தமிழகத்தில் வேலூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை போன்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் வன்னியர்கள் சமூக மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். ஜோதி பாண்டியனின் சமூக கட்டமைப்புகள் பற்றிய புரிதல் மற்றும் இந்து மதத்திற்குள் வன்னியர் சாதியை அவர் கண்டறிவது ஒரு மட்டத்தில் மிகவும் எளிமையானதாக தோன்றலாம். ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க முயல்வதாகக் கருதப்படும் இத்தகைய சமூகப் பொறியியலை, தமிழகத்தில் பலராலும் தமிழர் விரோத, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாகக் கருதும் கட்சியின் கடைசி எல்லையான, தமிழ் கலாச்சாரம், சமூகம் மற்றும் வரலாறு பற்றிய குறிப்பிடத்தக்க புரிதல் தேவை.

சாதிய அடையாளத்தை மத அடையாளத்துடன் உறுதிப்படுத்துவதும், ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதும் தமிழகத்தில் பா.ஜ.க-வின் முக்கிய உத்தியாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்யாததால், ‘பிராமண ஆதரவு’, உயர் சாதி ஆதிக்கக் கட்சி என்கிற வட்டத்தில் பா.ஜ.க சுருங்கிவிடும் அபாயம் உள்ளது. ஆனால், நடுத்தர சாதியினருக்கான இந்த அணுகுமுறை அக்கட்சிக்கு உதவுமா? அல்லது தமிழகத்தில் உள்ள தனித்துவமான சமூக சீர்திருத்த இயக்கத்தின் அடிப்படையில் எதிர்விளைவாக இருக்குமா? என்பதற்கு பதிலளிப்பது கடினம் 

எம்.ஜி.ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) அரசியல் பாரம்பரியத்தை பெற்ற அ.தி.மு.க-வின் நட்சத்திரத் தலைவரான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பா.ஜ.க தமிழகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

உண்மையில், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை இந்துத்துவா சித்தாந்தத்திற்கு கடந்த காலத்தில் திராவிடக் கட்சிகள் எதுவும் ஆதரவளிக்கவில்லை, அது எப்போதும் தந்திரோபாயமாக இருந்தது என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய 15 ஆண்டுகள் பணியாற்றியவரும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறைத் தலைவராகவும் இருந்த கல்வியாளர் ராமு மணிவண்ணன். 

“கடந்த தசாப்தத்தில் காங்கிரஸின் வீழ்ச்சி, திராவிடக் கட்சிகளில் அரசியல் தலைமை மாற்றம், இதையெல்லாம் பா.ஜ.க முன்னறிவித்தது. இது பல ஆண்டுகளாக முறையாகத் தயாரிக்கத் தொடங்கியது, ”என்று அவர் கூறினார்.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லாத நிலையில், எம்.ஜி.ஆர் நிறுவிய கட்சியான எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தற்போது பா.ஜ.க கூட்டணி) ஆகிய கட்சிகளின் மும்முனைப் பிளவு பா.ஜ.க-வுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தாது. “தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது.. அதை பா.ஜ.க பார்க்கிறது. ஆனால், அக்கட்சி பொது சமூகத்தின் எதிர்ப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது,” என்றார்.

அதைச் சொல்லிவிட்டு, வாக்களிக்கும் நடத்தையில் 'சாதி' தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார் மணிவண்ணன். மேலும், "திராவிட சமூக சீர்திருத்த இயக்கம் அதன் வகையான ஒன்றாகும். போற்றத்தக்கது மற்றும் மக்களுக்கு நன்றாக சேவை செய்துள்ளது. மறுபுறம், அவை எல்லாமே மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது. யாரும் அதற்கு பொறுப்புபேற்பதில்லை ” என்று அவர் கூறினார். 

இங்குதான், நேற்று புதன்கிழமை வேலூரில் மோடி பேசியது போல் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்க வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன. “ஊழல் செய்வதற்கான காப்புரிமை தி.மு.க-விடம்தான் உள்ளது” என்று குற்றம் சாட்டிய மோடி, மத்திய அரசு அனுப்பிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தி.மு.க விழுங்கி விட்டது என்று கூறினார்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) தொண்டர்கள் மௌனமாக மேற்கொண்ட வேலைகளும் தற்போது களத்தில் பா.ஜ.க-வுக்கு உதவுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் சகாக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 2,400 ஆக அதிகரித்துள்ளது என்று ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

புதன்கிழமை காலை மோடியின் பேரணியில் கலந்து கொள்வதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள வரதரெட்டிப்பள்ளி பஞ்சாயத்தில் இருந்து வேலூர் கோட்டை வரை 40 கி.மீ பயணம் செய்த தலித் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான எம்.பி மாரியப்பன், “நாங்கள் முன்னணியில் இல்லை. நாங்கள் திரைக்குப் பின்னால் அமைதியாக வேலை செய்கிறோம்.தலித்துகளின் பாரம்பரிய வாக்கு வாங்கி தற்போது மாறி வருகிறது" என்று மாரியப்பன் கூறினார். 

“முன்பு, எனது பஞ்சாயத்தில் எஸ்.சி சமூக மக்களின் வாக்குகள் தி.மு.க-வுக்கு மட்டுமே சென்றது. இப்போது, ​​எனது பஞ்சாயத்தில் உள்ள 1,140 தலித் வாக்குகளில் 600 பா.ஜ.க-வுக்குத்தான்." என்கிறார். அவர் இந்தி சரளமாக பேசுகிறார் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள சஹாரன்பூர் மற்றும் உத்தரகண்டில் உள்ள டேராடூனில் பணிபுரிந்துள்ளார்.

உண்மையில், எந்தக் கட்சியும் வெற்றிபெற, எஸ்.சி  சமூக மக்களின் வாக்குகள் முக்கியமானவை. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேலூர் மாவட்டத்தின் மக்கள்தொகையில் 21.85 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர் அல்லது தலித்துகள். வரதரெட்டிப்பள்ளி பஞ்சாயத்து மற்ற கிராமங்களின் பிரதிநிதியாக இருக்காது; இருப்பினும், இது பா.ஜ.க-வுக்கு சாத்தியக்கூறுகளை பரிந்துரைக்கிறது.

தி.மு.க-வைத் தாக்கிப் பேசிய மோடி, கட்சி "ஒரு குடும்ப நிறுவனமாக" மாறிவிட்டது என்றும் தி.மு.க-வையும் அதன் முக்கிய கூட்டாணி கட்சியான காங்கிரஸையும் ஒரே அடைப்புக்குள் இணைதத்தார். “தி.மு.க-வில் இருந்து போட்டியிட குடும்ப அரசியல், ஊழல், தமிழர் விரோத கலாச்சாரம் ஆகிய இந்த மூன்று அளவுகோல்களை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தி.மு.க தனது இளைஞர்களை பழைய அரசியலில் சிக்க வைத்துள்ளது; இதனால், தமிழக இளைஞர்களால் முன்னேற முடியவில்லை,'' என, வட தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்தார்.

வேலூரில் பெரிய கல்வி வியாபாரம் செய்து வரும் ஏ.சி.சண்முகம், முதலில் அ.தி.மு.க.வில் இருந்து, பின்னர் புதிய நீதிக்கட்சியை நிறுவி, பின்னர் பா.ஜ.க.-வில் சேர்ந்தார். சாதிய அடிப்படையில் அவர் ஒரு முதலியார். அவர் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 4,77,199 வாக்குகள் பெற்றார். ஆனால் தி.மு.க-வின் கதிர் ஆனந்திடம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். இத்தொகுதியில் வன்னியர், முதலியார் மற்றும் முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வேலூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் 10.54 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2.82 சதவீதமும் உள்ளனர். தலித்துகளுடன் சேர்ந்து, 2011 இல் வேலூர் மாவட்ட மக்கள்தொகையில் 35.21 சதவீதம் பேர் இருந்தனர்.

வட தமிழ்நாட்டு மாவட்டங்களில் வன்னியர்கள் அதிக சதவீத மக்கள்தொகையைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லாத சமூகத்தின் அளவு பற்றிய நம்பகமான மதிப்பீடுகள் எதுவும் இல்லை. முதலியார் போன்ற பிற பெரிய சமூகங்களின் நிலையும் அப்படித்தான்.

ஆனால், தமிழக அரசு முன்பு வன்னியர்களுக்கு 10.5 சதவீத சிறப்பு உள் இடஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வழங்க முயற்சி செய்தது. இதை உச்ச நீதிமன்றம் மார்ச் 2022ல் ரத்து செய்தது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக அளவில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் கதிர் ஆனந்த் வெற்றி பெறுவார் என்று நம்புகிறார்கள். அவர்களின் வாக்குகள், பா.ஜ.க-வுக்கு எதிரான வலுவான வேட்பாளருக்குச் செல்லும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர், கதிர் ஆனந்த்-திற்கு இங்கு வலுவான எதிர்ப்பு அலை உள்ளது. அவருக்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும், கட்சிக்காக வாக்களிப்பார்கள்  என்றார். எஸ்.சி சமூக மக்களின் வாக்குகளையும் அக்கட்சி கனக்குப் போட்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல்கள் நடைபெறவிருந்த நிலையில், வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த பணபலத்தைப் பயன்படுத்தியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, அவை குடியரசுத் தலைவரால் ரத்து செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்தின் தந்தை துரை முருகனின் கூட்டாளி என்று கூறப்படும் ஒருவரிடம் இருந்து வருமான வரித்துறையினர் பெரும் பணத்தை மீட்டுள்ளனர். பின்னர் ஆகஸ்ட் 5, 2019 அன்று சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வேலூரில் மோடி, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் மருமகளும், தர்மபுரியில் களமிறங்கியுள்ள அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி உட்பட வட தமிழகத்தின் பிற தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அரக்கோணத்தில் தி.மு.க.வின் எஸ்.ஜெகத்ரட்சகனை எதிர்த்து பா.ம.க.வின் கே.பாலு போட்டியிடுகிறார். திருவண்ணாமலையில் பா.ஜ.க சார்பில் கே.அசுவதாமன் போட்டியிடுகிறார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Tamil Nadu Bjp Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment