கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஒட்டி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூபாய் 4 கோடி கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, தாம்பரம் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த நெல்லை எக்ஸ்பிரஸை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, கணக்கில் வராத ரூ. 4 கோடி பணம் சிக்கியது.
இது தொடர்பாக போலீசார் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தமிழக பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 25 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை புதுச்சேரி ராஜசபா எம்.பி-யும், புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவருமான செல்வகணபதிக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் படி கூறியுள்ளனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“