Chennai Weather Updates: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.17) அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது.
சென்னை மழை நிலவரம் லைவ் அப்டேட்ஸ் ஆங்கிலத்தில் படிக்க: Tamil Nadu Chennai Rains, Weather Today Live Updates
மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 16, 2024 22:14 ISTசென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்
அதிக கனமழை பெய்யும் என்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Oct 16, 2024 21:06 ISTசுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது: சென்னை மாநகராட்சி
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது; 542 இடங்களில் நீர் தேங்கிய நிலையில் 501 இடங்களில் அகற்றம்; மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றப்படுகிறது மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 6,963 அழைப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
Oct 16, 2024 21:02 ISTதிருவள்ளூரில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் வேதனை
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமப் பகுதியில் மூன்றாம் போகத்திற்கான நாற்று நடவு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில், சமீபத்திய கனமழையால் வயல்களில் பயிர்கள் மூழ்கின நகைகளை அடகு வைத்து நாற்று நடுவை செய்த நிலையில், மழையால் பயிர்கள் சேதம் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வயல்களை நேரில் பார்வையிட்டு, உரிய நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
-
Oct 16, 2024 20:02 ISTபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்
இன்று ரெட் அலர்ட் கொடுத்தும், ஒரு துளி மழை கூட பெய்யவில்லை வானிலை ஆய்வு மையம் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
Oct 16, 2024 20:00 ISTசென்னை உட்பட 10 மாவட்டங்களுக்கு இன்று இரவு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துளளது.
-
Oct 16, 2024 19:59 ISTசென்னையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? மாவட்ட நிர்வாகம் தகவல்!
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 17) விடுமுறை விடுவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முழுவதும் மழை பெய்யாததால் இரவு பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நாளை முடிவெடுக்கப்படும் என்றும், மாநகராட்சிப் பகுதியில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மண்டல அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 16, 2024 18:27 ISTஉதயநிதி ஸ்டாலின் பாராட்டு
பள்ளிக்கரணை – கோவிலம்பாக்கம் இடையேயுள்ள நாராயணபுரம் ஏரியின் கால்வாய்களில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகளை அகற்றி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். மக்களின் கோரிக்கையை ஏற்று, 3 நாட்களாக ஆய்வு செய்து இப்பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது மழைநீர் வேகமாக வெளியேறுகிறது. இதற்கான பணியில் இரவு பகலாக உழைத்தப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
Oct 16, 2024 18:09 ISTவீடுகளை சூழ்ந்த மழைநீர் - மக்கள் வேதனை
பாடியநல்லூர் அடுத்த மகாமேரு நகர் பகுதியில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைத்துள்ளது.
அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் இடுப்பளவு நீரில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை என மகாமேரு நகர் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
Oct 16, 2024 17:46 ISTநிவாரண பொருட்களை வழங்கிய நடிகர் இமான் அண்ணாச்சி
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நடிகர் இமான் அண்ணாச்சி நிவாரண பொருட்களை வழங்கினார்.
-
Oct 16, 2024 17:45 ISTசென்னை மெட்ரோ ரயில்கள் நாளை முதல் வழக்கம்போல் இயக்கம்
சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வார அட்டவணைப்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
-
Oct 16, 2024 17:22 ISTசென்னை கனமழை - மக்களுக்கு உணவு உணவுப் பொருட்கள் விநியோகம்
சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் 5000-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#NewsUpdate | சென்னை கனமழை - பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் 5000க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம்#SunNews | #ChennaiRains | @tnhrcedept pic.twitter.com/soi5fgQgDR
— Sun News (@sunnewstamil) October 16, 2024 -
Oct 16, 2024 17:21 ISTசென்னை அடையாறு பூங்காவில் தண்ணீர் தேக்கம்
சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Watch | சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.#SunNews | #AdyarRains | #ChennaiRains | #WeatherUpdateWithSunNews pic.twitter.com/wvk1NfaHlS
— Sun News (@sunnewstamil) October 16, 2024 -
Oct 16, 2024 17:20 ISTகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? பாலச்சந்திரன் விளக்கம்
"காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை தற்போது கணிக்க இயலாது" தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
Oct 16, 2024 17:14 IST"மக்களிடையே பக்தி குறைந்ததுதான் திடீர் மழைக்கு காரணம்" - மதுரை ஆதீனம்
மதுரை ஆதினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "இன்றைய தலைமுறைகள் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை.
கோவில் இடங்களை வைத்திருப்பவர்கள் எல்லாம் சரியாக குத்தகை கொடுப்பதில்லை. அதனால்தான் பருவம் தவறி மழை பெய்கிறது. மக்கள், இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் திடீர் மழைக்கு காரணம்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Oct 16, 2024 16:39 ISTபவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பும் 20.61 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. 105 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 88.49 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.
-
Oct 16, 2024 16:33 ISTவங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழக்கவில்லை - பாலச்சந்திரன்
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. அடுத்த 24 மணிநேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையில் அதி கனமழை பெய்யக்கூடும். அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். தெற்கு ஆந்திராவில் நெல்லூர் - புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழக்கவில்லை. "காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது அதிகனமழை பெய்யும். அதிகனமழை பெய்யும் என்பதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை. மழைக்காக மட்டுமே ரெட் அலர்ட் கிடையாது - பாதிப்புகளையும் கருத்தில் கொண்டே எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ரெட் அலர்ட் என்று சொன்னாலே 20 செ.மீ.க்கு அதிகமாக மழை பெய்யும் என்று கிடையாது.” என்று கூறினார்.
-
Oct 16, 2024 15:16 ISTசென்னைக்கு 280 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 280 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும் புதுச்சேரிக்கு 320 கி.மீ கிழக்கு - வடக்கிலும் மையம் கொண்டுள்ளது. இது தற்போது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
-
Oct 16, 2024 15:10 ISTசென்னையில் கனமழையால் சுரங்கப் பாதையில் பெரும் பாதிப்பு இல்லை - கே.என். நேரு
அமைச்சர் கே.என். நேரு: “சென்னையில் கனமழையால் சுரங்கப் பாதையில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை; மழைநீர் வடிகால் பணிகள் காரணமாகவே 4 மணி நேரத்தில் நீர் வடிந்தது. பெருமழை இருக்கும் என அறிவிப்பு வந்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தோம். கடந்தமுறை பாதிப்பை ஏற்படுத்திய வேளச்சேரி, நாராயணபுரம் ஏரிகளில் இம்முறை பாதிப்பு இல்லை” என்று கூறினார்.
-
Oct 16, 2024 15:00 ISTபொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை - ஆவின் நிறுவனம்
பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Oct 16, 2024 14:52 ISTஅ.தி.மு.க ஆட்சியில் 400 கி.மீ மழைநீர் வடிகால்... தி.மு.க ஆட்சியில் 782 கி.மீ தூர வடிகால்கள் - கே.என். நேரு
அமைச்சர் கே.என்.நேரு: “நேற்று ஒரே நாளில் 17 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
-
Oct 16, 2024 14:01 ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.
-
Oct 16, 2024 13:52 IST12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 16, 2024 13:47 ISTகன மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை ஆய்வு மையம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 16, 2024 13:28 ISTகால்வாய் பணிகளை பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலின்
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என் நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
-
Oct 16, 2024 12:45 ISTமழைநீர் சூழ்ந்த பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
-
Oct 16, 2024 12:22 ISTவேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக 12 கி.மீ வேகத்தில் சென்ற நிலையில் தற்போது 15 கி.மீ வேகத்தில் செல்கிறது.
-
Oct 16, 2024 12:11 ISTமாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மழைநீரில் மூழ்கி பழுதாகும் வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களை தள்ளி செல்கின்றனர்
-
Oct 16, 2024 11:27 ISTதண்ணீர் நிக்காமல் இருப்பதுதான் வெள்ளை அறிக்கை - உதயநிதி ஸ்டாலின்
தண்ணீர் நிக்காம இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை என சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்
-
Oct 16, 2024 11:24 ISTதூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் உதயநிதி
சென்னை பருவமழையில் தொடர்ந்து பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.2000 ஊக்கத் தொகையுடன் நிவாரண பொருட்களை வழங்கினார்
-
Oct 16, 2024 10:52 ISTதேவைக்கேற்ப மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் - அமைச்சர் மா.சு
ஏற்கனவே 1000 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என மக்கள் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்
-
Oct 16, 2024 10:40 ISTட்ரோன் மூலம் உணவு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் திட்டம்
இதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடத்தப்பட்டது
-
Oct 16, 2024 10:21 ISTஇலவச உணவு
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Oct 16, 2024 10:08 ISTசுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கம்
சென்னை பெரம்பூர் சுரங்கப் பாதை மற்றும் ஸ்டீபன்சன் சாலையின் இருப்புறத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் நடைபாதை மேல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனத்தில் வருபவர்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது.
-
Oct 16, 2024 09:10 IST12 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது, முன்னதாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் 12 கி.மீ. ஆக சற்று அதிகரித்துள்ளது,
-
Oct 16, 2024 09:08 IST6 மாவட்டங்களில் கனமழை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.