திருவள்ளூரில் அரியவகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை, அவரது வீட்டிற்கே நேரில் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகில் இருக்கக்கூடிய வீராபுரம் பகுதியை சேர்ந்த தா டானியா, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
10 பேர் குழு கொண்ட மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு, இல்லம் திரும்பியுள்ள சிறுமியை தமிழக முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.