Coimbatore, Madurai, Trichy News Highlights: திருப்பூரில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் - பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது

Coimbatore, Madurai, Trichy News Live- 30 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 30 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gun seized

Coimbatore, Madurai, Trichy News Live: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரியாக 120.000 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 57,732 கன அடியில் இருந்து 58,000 அடியாக  அதிகரித்துள்ளது. அணையிலிருந்து மொத்தமாக 58,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 26,000 கனடியும், 16 கண் மதகுகள் வழியாக 32,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாக உள்ளது.

  • Jun 30, 2025 20:37 IST

    திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - சிறப்பு ரயில் இயக்கம்

    திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் ரயில், 10:50 மணிக்கு திருச்செந்தூரை அடைய உள்ளது. மறுமார்க்கமாக காலை 11:20 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 12:55 மணிக்கு நெல்லையை வந்தடையும்.



  • Jun 30, 2025 20:01 IST

    தஞ்சையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை - ஆசிரியர் கைது

    தஞ்சையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் கண்டித்ததால், மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.



  • Advertisment
  • Jun 30, 2025 19:44 IST

    திருப்பூரில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் - பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது

    திருப்பூர் மாவட்டம், குப்பண்டம் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் சோதனைக்கு சென்றனர். அப்போது, பீகாரைச் சேர்ந்த ஜாஹிர் அன்வர், ரவி ராஜா ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் இருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 30, 2025 18:52 IST

    கிருஷ்ணகிரி - விவசாயிகளுக்கு ஆதரவாக தே.மு.தி.க கண்டன ஆர்ப்பாட்டம்

    தே.மு.தி.க சார்பில் இந்த கிருஷ்ணகிரியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மா விவசாயிகளின் வாழ்வதரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மேடையில் மாங்காய்களை கொட்டியும், மா மரங்களில் மா விவசாயிகளின் குடும்பங்களின் உருவ பொம்மைகளை தூக்கிலிட்டு தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உருவ பொம்மைகளை வைக்க போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு தேமுதிவினர்க்கும் போலீசாரும் இடையே சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Jun 30, 2025 18:39 IST

    சிவகங்கை லாக்-அப் மரணம் - வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்

    சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கிடையில் உயிரிழந்த கோயில் காவலாளர் அஜித்குமார் சம்பவம் தொடர்பான வழக்கு, தமிழக தலைமை காவல்துறைதலைவர் (டிஜிபி) சங்கர் ஜிவால் அவர்களின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு துறையான சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மரண சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, மேலதிக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Jun 30, 2025 18:36 IST

    13 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை மழை

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நிலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விருதுநகர் மற்றும், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 30, 2025 18:15 IST

    சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் மரண வழக்கு: நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் நேரில் ஆய்வு

    திருப்புவனம் அருகே மடப்புரத்தில் நகைத்திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் குற்றப் பிரிவு போலீசார் அவரிடம் விசாரித்த பகுதியான பத்ரகாளியம்மன் கோயில் கோசாலையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் நேரில் ஆய்வு செய்தார்.



  • Jun 30, 2025 17:56 IST

    ரூ. 75,000 ரூபாய் லஞ்சம்  -  கையும் களவுமாக சிக்கிய திருவள்ளூர் தனி வட்டாட்சியர்

    திருவள்ளூரில் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நில எடுப்பு தனி வட்டாட்சியர் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார். அரசு கையகப்படுத்திய இடத்திற்கு பணம் கொடுக்க லஞ்சம் கேட்ட நிலையில், புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 



  • Jun 30, 2025 16:55 IST

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் நகைத்திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றப் பிரிவு போலீசார் அவரிடம் விசாரித்த பகுதியான பத்ரகாளியம்மன் கோயில் கோசாலையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் நேரில் ஆய்வு செய்தார்.



  • Jun 30, 2025 16:54 IST

    பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கக்கோரி மனு

     ஈரோட்டில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்துள்ளனர். 



  • Jun 30, 2025 16:15 IST

    சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணம் - வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

    சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணம் - வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு இவ்வழக்கில் தொடர்புடைய 6 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரணையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 



  • Jun 30, 2025 15:36 IST

    தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

    கிருஷ்ணகிரியில் ``மா'' விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நூதன போராட்டம் “மா“ விவசாயிகள் தற்கொலை செய்வதைப் போல வைக்கப்பட்ட உருவ பொம்மைகள் போலீசாருக்கும் தேமுதிகவினருக்கும் இடையே வாக்குவாதம்



  • Jun 30, 2025 15:36 IST

    ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பெண்கள்

    பிகார் மாநிலம் கயாவில் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 6 பெண்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.  துரிதமாக செயல்பட்டு பெண்களை உள்ளூர் மக்கள் மீட்டனர்.



  • Jun 30, 2025 15:35 IST

    பழனி முருகன் கோவில் ஆக்கிரமிப்பு வழக்கு - ஆட்சியருக்கு உத்தரவு

    பழனி முருகன் கோவில் பின்புறம் உள்ள இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை மீட்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அறநிலையத்துறை ஆணையர், திண்டுக்கல் ஆட்சியர் தரப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • Jun 30, 2025 14:35 IST

    தஞ்சையில் தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை

    தஞ்சையில் தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். சக மாணவிகளுடன் பேசியதற்கு திட்டியதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவர் ஸ்ரீராம் தற்கொலை செய்துகொண்டார். மாணவர் தற்கொலை தொடர்பாக ஆசிரியரை சிம்காஸை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • Jun 30, 2025 14:02 IST

    தமிழகடததில் 3 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

    தமிழகத்தில் தேனி, தென்காசி மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மாலை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் தேனி, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



  • Jun 30, 2025 12:06 IST

    திருப்பூரில் துப்பாக்கிகளுடன் பீகார் இளைஞர்கள் 2 பேர் கைது

    திருப்பூர், குப்பாண்டம்பாளையத்தில் துப்பாக்கிகளுடன் பீகாரை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் கஞ்சா வேட்டையில் சிக்கிய இருவரும் பீகாரில் இருந்து ரூ.6 ஆயிரத்திற்கு துப்பாக்கிகளை வாங்கி வந்து ரூ. 50,000-க்கு விற்க வைத்திருந்தது தெரியவந்தது. துப்பாக்கியை யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 30, 2025 11:43 IST

    சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு

    Video: Sun News



  • Jun 30, 2025 11:10 IST

    இளைஞர் காவல் விசாரணையில் பலி

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சேர்ந்த இளைஞர் காவல் விசாரணையில் பலியானதை தொடர்ந்து சென்னை நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை



  • Jun 30, 2025 10:25 IST

    சலூன் கடை உரிமையாளர் கழுத்தை அறுத்து கொலை

    கடலூர், சலூன் கடை உரிமையாளர் நாகமுத்து கழுத்தை அறுத்து படுகொலை. நகைக்காக கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் கடலூர் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 30, 2025 10:23 IST

    நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் திருவிழா

    உலகிலேயே பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்  ஒன்றாக இருக்கக்கூடிய நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற ஆனித்தேரோட்டம் திருவிழா. அம்பாள் கொடிமரம் முன்பு எழுந்தருளி சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி பட்டம் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது.

    கொடியேற்றம் நடைபெற்ற பின் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாதாரணைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்



  • Jun 30, 2025 09:54 IST

    தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை வனப்பகுதி

    தொடர் மழையால் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது. வனவிலங்குகள் சாலையோரம் தென்படுவதால் அவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர். வடகிழக்கு பருவமழையும் நன்கு பெய்யும் பட்சத்தில் நீர்நிலைகள் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் உலா வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி இறங்குவதோ அவற்றின் அருகில் செல்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும், என்றனர்.



  • Jun 30, 2025 09:53 IST

    முன்னறிவிப்புமின்றி பாவூர்சத்திரம் ரயில்வே கேட் மூடல்

    பாவூர்சத்திரம் ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டதால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரயில் கேட் திறந்த பிறகு இந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.



  • Jun 30, 2025 09:15 IST

    மேட்டூர் அணையில் இருந்து 58,000 கனஅடி நீர் திறப்பு

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 58,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், 44வது ஆண்டாகவும், ஜூன் மாதத்தில் 66 ஆண்டுக்கு பிறகு 2வதாகவும், நேற்று மாலை முழுமையாக நிரம்பி 120 அடியை எட்டியது.



  • Jun 30, 2025 09:15 IST

    நாய் கடித்து 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுற்றித் திரியும் வெறிநாய் கடித்ததில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வசந்தி (40), தனுஸ்ரீ (6), பிரேம்குமார் (26) உள்பட 4 பேர் விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்



  • Jun 30, 2025 09:13 IST

    நெல்லையில் விஷவண்டு கடித்து 7 வயது சிறுவன் பலி

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே மாவடி பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்த 2 சிறுவர்களை அங்கு கிடந்த தேங்காயில் இருந்த விஷவண்டு கடித்தது. 2 சிறுவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக களக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர். நேற்று அதிகாலையில் சிறுவன் ஜீவானந்தத்திற்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவானந்தம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 30, 2025 09:12 IST

    கோவை: ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து 21 பேர் காயம்

    கோவை அருகே இன்று அதிகாலை சாலை தடுப்பு சுவரில் மோதி மின்சார பேருந்து எரிந்து சேதமானது. டிரைவர் உள்பட பேருந்தில் பயணம் செய்த 21 பயணிகள் படுகாயமடைந்தனர். திருச்சியிலிருந்து கோவை நோக்கி நேற்றிரவு தனியார் மின்சாரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் அருகே பைபாஸ் சாலையில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்பு சுவரில் மோதியது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: