தமிழக முதலமைச்சர் வரும் 18ஆம் தேதி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக கோவை வருகிறார்.
இதனிடைய முதலமைச்சர் வருகையையொட்டி செம்மொழி பூங்கா அமைய உள்ள காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தை வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்ததுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று அதனை 30 நாட்களுக்குள் சரி செய்யும் வகையில் மக்களோடு முதல்வர் திட்டம் 18ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.
முதலமைச்சர் கோவை வருகை தந்து அந்த திட்டத்தை துவக்க உள்ளார். செம்மொழி பூங்கா அமைய உள்ள இந்த இடத்தில் மக்களோடு முதல்வர் என்ற திட்டத்தை துவக்ககிறார்.
தொடங்கி வைத்த உடனே தமிழக முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.19ஆம் தேதி கோவையில் 17 நாட்கள் தினந்தோறும் 10 இடங்களில் மனுக்கள் வாங்கும் நிகழ்வு நடக்கும்.
இந்தத் திட்டத்தை தொடர்ந்து 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை கொடுக்கும் நிகழ்வு நடக்க உள்ளது. அதைத்தொடர்ந்து செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
முதல் கட்டமாக 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது.தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்படும்.
மாநிலங்களவையில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அமைச்சர், மிக கண்காணிப்பாக இருக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு, மற்றவர்களை கட்டுப்படுத்துவதற்கு சொல்வதற்கோ, அவர்களுக்கு இருக்கக்கூடிய உரிமையை இழந்து விட்டதாக கருதுகிறோம் என தெரிவித்தார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“