க.சண்முகவடிவேல்
ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மூன்றாவது ஆண்டாக குறிப்பிட்ட நாளான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வந்திருக்கிறோம். குறிப்பிட்ட நாளில் திறந்து வைத்தால் மட்டும் போதாது அது கடைமடை வரை சென்றடைய வேண்டும். அதற்கு திட்டமிட்டோம். இதற்காகத்தான் 90 கோடி மதிப்பீட்டில் 4773 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக, விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடிகல் நாட்டி கட்டியது திமுக, ஆனால் இதனை திறந்து வைத்தது ஜெயலலிதா, புதிய தலைமைச்செயலகம் கட்டினோம் அதிமுக அரசு மருத்துவமனையாக மாற்றியது. மெட்ரோ ரயில் நிலையம் திட்டத்தை தொடங்கியது திமுக, இந்த திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதாவே திட்டத்தை தொடங்கி வைத்தார். அம்மா உணவகம் திட்டத்தை தொடர்ந்து திமுக அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். தமிழர்களை பிரதமராகாமல் திமுக தடுத்தது என அமித்ஷகூறியதற்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், இது தொடர்பாக வெளிப்படையாக சொன்னால் மட்டுமே விளக்கம் அளிக்க முடியும் என கூறினார்.
தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது மகிழ்ச்சி. ஆனால் இதில் உள்நோக்கம் புரியவில்லை. ஆனால் மோடி மீது அமித்ஷாவிற்கு என்ன கோபம் என தெரியவில்லை. 2024 பாஜக பிரதமர் வேட்பாளர் இருந்த தமிழிசை மற்றும் முருகனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறினார். மத்தியில் திமுக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருந்து பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வந்ததாக பட்டியலிட்டேன். இதற்கு அமித் ஷா பதில் அளிக்க வேண்டும் என கேட்டிருந்தேன்.
ஆனால் என்னுடைய கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் சொல்லவில்லை, செய்த சாதனைகளைக் கேட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியை பற்றி சொல்கிறார்கள். தமிழகத்திற்கு என எந்த ஒரு புதிய திட்டமும் பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை. இதற்கு பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை. ஜிஎஸ்டி அதிக நிதி தமிழ்நாட்டில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட குறைவான நிதியே தமிழகத்திற்கு ஒதுக்குகின்றார்கள். மதுரை எய்ம்ஸ் அமைப்பதாக சொல்லி இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. இதற்கு அமித்ஷா என்ன பதில் சொல்லப் போகிறார் என கேள்வி எழுப்பியவர், மூடி மறைத்து விட்டு அமித்ஷா சென்றுவிட்டதாக கூறினார்.
தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்த அமித் ஷாவின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, "தமிழகத்துக்கு என்று பிரத்யேகமாக என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு அமித் ஷா பதில் சொல்லவில்லை" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.