'இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்': டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஸ்டாலின் ஆதரவு

"டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

"டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin backed Carnatic musician T M Krishna Tamil News

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

TN Cm Mk Stalin | Tm Krishna: 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வான பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது முற்போக்குக் கொள்கைக்காக குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் அவர் குறிவைக்கப்படுவதாகக் தெரிவித்துள்ளார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: TN CM throws weight behind noted vocalist TM Krishna

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

"சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment
Advertisements

கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநிகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை." 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cm Mk Stalin Tm Krishna

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: