தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர், சென்னை 122 வார்டில் தேனாம்பேட்டை SIET கல்லூரி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், "வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்த சம்பவமும் கோவையில் நடைபெறவில்லை. தோல்வி பயம் காரணமாகவே கோவையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதாரத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கணிப்பின்படி 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil