Tamil Nadu Chief minister MK Stalin celebrates his 70th birthday with his family Tamil News
TN CM Stalin turns 70, family celebrates Tamil News: தி.மு.க. தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாள் விழாவை கொண்டுகிறார். இதையடுத்து, அவருக்கு நாட்டின் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மூத்த சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. மற்றும் குடும்பத்தினரும் வந்திருந்து முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த கேக் வெட்டுதல் நிகழ்வின் போது குடும்பத்தினர் அனைவரும் 'ஹாப்பி பர்த்டே' பாடலை பாடி மகிழ்ந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil