TN CM MK Stalin changes Twitter profile pic - தேசியக் கொடியுடன் இளம் வயது கருணாநிதி… ட்விட்டரில் ஸ்டாலின் ப்ரொஃபைல் திடீர் மாற்றம்! | Indian Express Tamil

தேசியக் கொடியுடன் இளம் வயது கருணாநிதி… ட்விட்டரில் ஸ்டாலின் ப்ரொஃபைல் திடீர் மாற்றம்!

Tamil Nadu CM MK Stalin changes Twitter profile pic, has photo of Karunanidhi with tricolour in background TAMIL NEWS: தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் ப்ரொஃபைல் படத்தில், மறைந்த முன்னாள் கருணாநிதியின் பின்னணியில் இந்திய மூவர்ணக் கொடி இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார்.

TN CM MK Stalin changes Twitter profile pic
The display picture showed the late Karunanidhi, flanked by officials, descending steps, presumably at the Fort St George here where the state Secretariat

TN CM MK Stalin news in tamil: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் ப்ரொஃபைல் புகைப்படத்தை மாற்றி, பின்னணியில் இந்திய மூவர்ணக் கொடியுடன் கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து, மறைந்த தந்தை முதல்வர்களுக்கான கொடியேற்ற உரிமையை உறுதி செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31 ஆம் தேதி) மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களின் காட்சி படமாக தேசிய கொடியை (DP) பயன்படுத்த வேண்டும் என்றும், இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையா ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்ததை நினைவு கூறும் விதமாகவும், நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டும் இந்த வேண்டுகோளை அவர் விடுத்திருந்தார்.

மேலும், அந்த உரையில், “சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரெயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வேயின் வரலாற்றுப் பங்கு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம்” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் ப்ரொஃபைல் புகைப்படத்தில், மறைந்த முன்னாள் கருணாநிதியின் பின்னணியில் இந்திய மூவர்ணக் கொடி இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை ட்வீட் செய்துள்ள முதல்வர், “ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த ப்ரொஃபைல் புகைப்படத்தில், மாநில செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, படிகளில் இருந்து இறங்குகிறார். அவரது பின்னணியில் இந்திய மூவர்ணக் கொடி பறக்கிறது.

தமிழக முதல்வர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றி வைப்பார்கள். அந்த உரிமையை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் பெற்றுத் தந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn cm mk stalin changes twitter profile pic