Advertisment

செய்தியாளர் மீது தாக்குதல்; யாராக இருந்தாலும் நடவடிக்கை: மு.க ஸ்டாலின் உறுதி

திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சிகிச்சையில் உள்ள அவருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
 TN CM MK Stalin condemn on Tiruppur Journalist Attack Tamil News

திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

CM MK Stalin: நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

Advertisment

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- 

"திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபுவை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர்  நேச பிரபு  காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை முக்கியமாக கருதி மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபு அவர்களுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்” 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment