'இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்': கூட்டுக் குழு கூட்டம் குறித்து ஸ்டாலின் பதிவு

கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும். என்று தி.மு.க. தலைவரும், முதல்மைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும். என்று தி.மு.க. தலைவரும், முதல்மைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin Delimitation JAC meeting Tamil News

"நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழகம் போன்ற மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.

Advertisment

இதனால், தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவரது தலைமையில் கடந்த 5-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 58 கட்சிகள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடிதம் 

அதனைத் தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), பினராயி விஜயன் (கேரளா), சித்தராமையா (கர்நாடகா), பகவந்த் மான் (பஞ்சாப்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மற்றும் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவகுமார், முன்னாள் முதல்-மந்திரிகள் ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), நவீன் பட்நாயக் (ஒடிசா), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா) ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Advertisment
Advertisements

அந்தக் கடிதத்தில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும், அதில் பங்கேற்க வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கூட்டுக் குழு கூட்டம் 

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு முதல் நடக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்.

இந்தக் கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில், எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

வரலாற்றில் பொறிக்கப்படும்

இந்நிலையில்,  கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும். என்று தி.மு.க. தலைவரும், முதல்மைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 "நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும். நியாயமான தொகுதி மறுசீரமைப்பிற்கான நமது உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதலமைச்சர்களையும், அரசியல் தலைவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு நான் அன்புடன் வரவேற்கிறேன்." என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: