தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான உடல் பரிசோதனைக்கு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.
மருத்துவமனை சார்பில் நேற்று அறிக்கை வெளியான நிலையில், "வழக்கமான உடல் பரிசோதனைக்காக மட்டுமே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வருகை தந்திருப்பதாகவும், இன்று அவர் வீடு திரும்புவார்", என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொழில் முதலீடுகளுக்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம், வளர்ச்சி திட்டங்களில் துவக்கி வைக்கவும், அரசு பணிகளை பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்யவும் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது உடல் பரிசோதனை செய்து வீடு திரும்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil