/indian-express-tamil/media/media_files/nHuD4WxXylHyHctShTKt.jpg)
"நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருக." என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!" என்று கூறியுள்ளார்.
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது!
— M.K.Stalin (@mkstalin) January 22, 2025
வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!@TThenarasuhttps://t.co/umbpC8ZmLs
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.