Cm Mk Stalin | Karunanidhi: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் வருகிற 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கேள்வி பதில் நேரத்தில் அறிவித்தார்.
இதுகுறித்து பேசுகையில், "கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டது. சிறப்பு விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம். அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்படும்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி என அனைத்துக்கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“