ரூ.184 கோடி நிலுவை: 'பங்கு தொகையை விடுவியுங்கள்' - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

"பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.304 கோடியில், ரூ.184 கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கப்படவில்லை. நிலுவை பங்கு தொகையை உடனே விடுவியுங்கள்" என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN CM MK Stalin letter to union minister to release social-welfare schemes fund Tamil News

"பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.304 கோடியில், ரூ.184 கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கப்படவில்லை. நிலுவை பங்கு தொகையை உடனே விடுவியுங்கள்" என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட மத்திய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வலியுறுத்தி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

'மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் 31-01-2025 ஆம் நாளிட்ட கடிதத்தில், திறன்மிகு குழந்தைகள் மையம் (Mission Saksham Anganwadi & POSHAN 2.0), மகளிர் சக்தி இயக்கம் (Mission Shakthi) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் (Mission Vatsalya) போன்ற மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு, 29-1-2025 ஆம் நாள் நிலவரப்படி ரூ.716.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

பெரும்பாலான நேர்வுகளில், மத்திய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. நிதியாண்டின் முடிவிற்குள் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.  

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளதையும் கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை (Single Nodal Agency) கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகை மத்திய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் கூறிய முதல்வர், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டும். 

இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Cm Mk Stalin Central Government Tamil Nadu Govt

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: