/indian-express-tamil/media/media_files/tjEzPkaMQwQjvbgq16lk.jpg)
தமிழ்நாட்டின் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், "அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி.
20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, 519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.
நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது. பயணத்தைத் தொடர்வோம். தமிழ்நாட்டை உயர்த்துவோம்." என்று அதில் தெரிவித்துள்ளார்.
#DravidianModel அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!
— M.K.Stalin (@mkstalin) May 31, 2024
20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி,
519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள்,… pic.twitter.com/Pn4aGrWlUw
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.