Advertisment

மோடி முகத்தில் தோல்வி பயம்; 'எந்தத் தகுதியும் இல்லை': ஸ்டாலின் கடும் சாடல்

"பிரதமர் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin retort for PM modi speech at Tirunelveli Tamil News

' பிரதமர் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

TN CM MK Stalin | Pm Modi Speech: தமிழ்நாட்டிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். நேற்று புதன்கிழமை திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "தமிழக அரசுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. தி.மு.க.வும் காங்கிரசும் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் அகற்றப்பட வேண்டிய கட்சிகள். 

Advertisment

தேர்தலுக்கு பிறகு தேடினாலும் தி.மு.க. கிடைக்காது, முற்றிலும் அகற்றப்பட வேண்டிய கட்சி தி.மு.க. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டைக்கொள்ளையடிப்பதற்காகத்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுத்து வருகின்றனர்.

ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேள்வி கேட்கின்றனர். ராமர் கோவில் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள விளம்பரத்தில் சீனாவின் ராக்கெட்டை தி.மு.க. பயன்படுத்தி உள்ளது. 

தி.மு.க. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலேயே தி.மு.க.வினர் குறியாக இருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்யப்போகிறார்கள் எனக்கேட்டால் தி.மு.க.விடம் பதில் இருக்காது. வாரிசுகளுக்காக அவர்கள் இருக்கிறார்கள், ஆனால் உங்களுக்காக நான் இருக்கிறேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.க.வும் காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கின்றன. சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்." என்று கூறியிருந்தார். 

ஸ்டாலின் கடும் சாடல் 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு தி.மு.க தலைவரும், தமிழநாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தி.மு.க.வைப் பற்றியும், தி.மு.க. அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி, தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது.

எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டி திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு தடையாக இருந்தோமா? என்று தெரியவில்லை. பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர் மோடி.

நீட் தேர்வை எதிர்க்கிறோம் ஏழை மக்களின் மருத்துவக் கல்வி கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம்.

தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று தான் வகிக்கும் பதிவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களை கலைஞர் அப்படி வளர்க்கவில்லை.

கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்க தெரியாத பா.ஜ.க. வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன். ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியை தராமல், வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் அரசாட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pm Modi Speech Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment