Advertisment

'ஸ்பெயின் சாதனைப் பயணம்; ரூ.3,440 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு': ஸ்டாலின் பேச்சு

"எனது ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறேன்." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin return from Spain speaks of investment and journey Tamil News

"பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பா.ஜ.க எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார்." என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

CM MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 10 நாள்கள் சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 27 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர்களுடன் ஆலோசனை செய்தார். அத்துடன் ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தமிழர்களுடனும் கலந்துரையாடினார்.

Advertisment

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், 10 நாட்கள் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "எனது ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை ஸ்பெயின் மாநாட்டில் எடுத்துரைத்தேன்.

ஸ்பெயின் நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களை தனித்தனியாக நேரில் சந்தித்தேன். ரோக்கா, ஹபக் லார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களையும் நான் நேரில் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்வதற்கு ஸ்பெயின் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடரும். தமிழ்நாடு தனிப் பாதையில் பயணிப்பதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் பாராட்டியுள்ளது.

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பா.ஜ.க எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார்." என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், "மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்" என்று கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment