Advertisment

டெல்டா மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்… ஸ்டாலின் திருச்சி வருகை எப்போது?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN CM MK Stalin visit delta dist and Trichy date Tamil News

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

க.சண்முகவடிவேல்

Advertisment

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். வரும் 24ம் தேதி காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வரும் தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின், திருச்சியில் இருந்து சாலை வழியாக நாகப்பட்டினத்திற்கு சென்று இரவு ஓய்வு எடுக்கிறார்.

அதனைத்தொடர்ந்து 25-ம் தேதி காலை திருக்குவளையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.

மேலும், 26-ம் தேதி தமிழக முதலமைச்சர் கள ஆய்வு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் . இதனைத்தொடர்ந்து 27-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெறம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் சிறப்பு விமானம் மூலம் திருச்சியில் இருந்து முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Mk Stalin Trichy Cm Mk Stalin Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment