தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று சிங்கப்பூர் செல்ல முடிவு செய்துள்ளார். அங்கிருந்து ஜப்பான் செல்லும் வகையில் பயண திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகவும், சமீபத்தில் துபாய் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, தற்போது முதல்வர் பயணம் மேற்கொண்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் மீண்டும் வெளிநாடு சுற்றுலாவா?”, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“முதல்வர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க போகிறாரா? இல்லை முதலீடு செய்ய போகிறாரா? என மக்களுக்கு சந்தேகம்”, என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil