கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28, 29 ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்டாலின் மேற்கொள்ள இருந்த கள ஆய்வுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மற்றும் கோவையில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனைத்தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட மாவட்டங்களில் பல நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
அடுத்தகட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் இந்த கள ஆய்வுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள், கள ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“