Advertisment

ஸ்டாலினுக்கு மேலும் சில நாட்கள் ஓய்வு தேவை: காவேரி மருத்துவமனை அறிக்கை

Tamil Nadu Chief Minister MK Stalin is recovering well and is in good health, says Kauvery hospital in the latest medical bulletin Tamil News: முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு மேலும் சில நாள்கள் ஓய்வு தேவை என்றும் கூறியுள்ளது.

author-image
WebDesk
Jul 15, 2022 14:48 IST
Tamil News, Tamil News Today Latest Updates

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Tamil Nadu Chief Minister M K Stalin Tamil News: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த செவாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 2 நாட்கள் தனிமைபடுத்தலுக்குப் பிறகு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் விரைந்து குணமடைந்து வருகிறார். அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

publive-image

இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினை அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்தார். திமுக எம்.பி.கனிமொழி நேரில் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

#Cm Mk Stalin #Tamilnadu News Update #Tamilnadu News Latest #Mk Stalin #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment