Advertisment

தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாசம்- இந்த 3 கேள்விக்கு பதில் சொல்லுங்க பிரதமரே- மு.க.ஸ்டாலின் தாக்கு

கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பிரதமர் மோடி திமுக, காங்கிரஸ் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi stalin.

Tamil Nadu

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. அந்தவகையில், தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் பாஜக எடுத்துள்ளது.

Advertisment

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை நேற்று வெளியிட்டார்.

அதில்,’1974-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசு சுமார் 1.6 கிமீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட தீவை இந்திய-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைப் பகுதியாக ஏற்றுக்கொண்டது. அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியிலிருந்தது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 1) காலை தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், ’கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பாக வெளியாகும் புதிய தகவல்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களைப் பேண திமுக எதுவுமே செய்யவில்லை என்பது புலப்படுகிறது.

காங்கிரஸும், திமுகவும் குடும்ப அமைப்புகள். அவர்களின் மகன்கள், மகள்கள் முன்னேற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை. வேறு யாரைப் பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை.

கச்சத்தீவு மீதான அவர்களின் அக்கறையின்மை தான் ஏழை மீனவர்கள், குறிப்பாக மீனவப் பெண்களின் நலன்களைப் பெரிதும் பாதித்துள்ளது, என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து இன்று காலை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார்.

அப்போது அவர்,’நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இலங்கைக்குத் கச்சத்தீவை வழங்க விரும்பினார். கச்சத்தீவு தொடர்பான பல தசாப்தங்களாக நிலவி வரும் எல்லை மற்றும் மீன்பிடி தொடர்பான உரிமைகள் பிரச்னை, திடீரென உருவாகவில்லை. அது நாடாளுமன்றத்தில் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே அடிக்கடி கடிதப் பரிமாற்றம் நடந்து வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்த பிரச்னை குறித்து பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், இதே பிரச்னை குறித்துக் கேட்டிருக்கிறார். இதுவரை தமிழக முதல்வர்களுக்கு 21 முறை இது தொடர்பாகப் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் அணுகியுள்ளன.

இன்றைய மத்திய அரசு இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய சூழலிலிருந்தாலும், இது இப்போதுதான் நடந்தது என்பது போல இரு கட்சிகளும் செயல்படுகின்றன எனக் கூறினார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், ’பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே... இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment