Advertisment

அமெரிக்கை நாராயணன் மீது காங்கிரஸ் நடவடிக்கை: காரணம் இதுதான்!

தமிழ் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில், பங்கேற்று கருத்து தெரிவித்து வந்த அமெரிக்கை நாராயணன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN congress committee action against Americai Narayanan, what reason to action against Americai Narayanan, அமெரிக்கை நாராயணன் மீது காங்கிரஸ் நடவடிக்கை, அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ், கேஎஸ் அழகிரி, KS Alagiri, Americai Narayanan, Rahul Gandhi, Priyanka Gandhi, Nehru family

இந்தியாவில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலி காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரக்காண்ட், மணிப்பூர், ஆகிய 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இருந்த ஆட்சியை ஆம் ஆத்மி கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.

Advertisment

காங்கிரஸ் கட்சி 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு காங்கிரஸ் கட்சி தலைமை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முந்தைய உ.பி சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால், இந்த தேர்தல் முடிவில் வெறும் 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கிடைத்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டதால், அவர் உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

உத்தரக்காண்ட்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. கோவாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியால் மணிப்பூர் மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

5 மாநிலத் தேர்தலில், காங்கிரஸ் தலைமை மீது பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால செயல்தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள ஜி 23 தலைவர்கள் என்கிற மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து விவாதம் நடத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அவசர கூட்டம் நடத்தினர். இந்த நிலையில்தான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், செயற்குழு உறுப்பினர் அமெரிக்கை நாராயணன் காங்கிரஸ் தலைமையை விமர்சித்துப் பேசினார்.

காங்கிரஸ் கட்சி 5 மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று நேரு குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும். நேரு குடும்பத்தினரின் தலைமை சரி இல்லை. ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கத் தகுதி இல்லை. பிரியங்காவும் வெளியேற வேண்டும் என்று அதிரடியாக விமர்சனங்களை வைத்திருந்தார். அமெரிக்கை நாராயணனின் இந்த கருத்து காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அமெரிக்கை நாராயணன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, எடுத்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் இனி அவர் பங்கேற்க கூடாது. அவர் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார் என்று என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்கை நாராயணன் தன்னை அந்த பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “என்னை விளக்கம் கேட்காமல், 30 வருடமாக கட்சிக்கு சொந்தப் பணத்திலும் உழைப்பிலும் புகழ் சேர்த்த நான், காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக பேசியது என்ன? தலைவர் அழகிரி விளக்கம் கேட்க வேண்டும்? கடந்த 3 நாட்கள் நான் பேசியது அனைத்தும் காங்கிரசை காப்பாற்றுவோம் என்றே!

என்னை நேரில் விளக்கம் கேட்காமல் சமூக தளத்தில் விளக்கம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பிரச்சினையை, மக்கள் சமூக தளத்தில் விசாரிக்க வழிவகுத்த அழகிரியே!

இதோ ரஃபேல், பாஜகவின் லஞ்ச லாவண்யத்தை தி.க.-வை திட்டியதுதான், கட்சியை விட்டு விலக்கக் காரணமா? அழகிரியே பதில் சொல் பதுங்காதே” என்று தொடர் ட்வீட்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rahul Gandhi Congress All India Congress Priyanka Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment