scorecardresearch

அரசியல் கட்சிகள் 7பேர் விடுதலையைக் கோருவது ஏற்புடையது அல்ல: கே. எஸ் அழகிரி

7பேர் விடுதலையை நீதிமன்றம் அனுமதித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சிகள் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல.

அரசியல் கட்சிகள் 7பேர் விடுதலையைக் கோருவது ஏற்புடையது அல்ல: கே. எஸ் அழகிரி

7பேர் விடுதலையை நீதிமன்றம் அனுமதித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சிகள் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல என்று தமிழ் மாநில  காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ”

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

7பேர் விடுதலையை நீதிமன்றம் அனுமதித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சிகள் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியில்லை.

பெரும் மதிப்பிற்குரிய அப்துல் கலாம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி, தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.

கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும்

எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn congress committee k s alagiri statement about rajiv gandhi assassination convicts