Advertisment

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்கக் கூடாது; தமிழக காங்கிரசில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் சிவகங்கை பிவிவினர் உயர் மட்ட தலைமைக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Karthi Chidambaram

கார்த்தி சிதம்பரத்தின் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய தலைமைக்கு அழுத்தம் கொடுக்க கட்சிக்குள் ஒரு பிரிவினரின் முயற்சியை ஒருங்கிணைக்க நாச்சியப்பன் முயற்சி செய்கிறார் என்று காங்கிரஸ் உள்விவகாரங்கள் கூறுகின்றன. (Photo: Karti Chidambaram/ X)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் சிவகங்கை பிவிவினர் உயர் மட்ட தலைமைக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். காங்கிரசில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிர்ப்புகள் எழுவது புதிதல்ல, அவருடைய தந்தை ப. சிதம்பரத்தின் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு கார்த்தி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: TN Congress divisions in the open with campaign to drop Karti Chidambaram from Sivaganga

சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்கட்சி பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (டி.என்.சி.சி) சிவகங்கை பிரிவு முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், மூத்த தலைவர் கே.ஆர். ராமசாமி உள்ளிட்டோர், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு இந்த முறை சீட்டு வழங்கக்கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ள தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சிவகங்கை பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2019-ல் கார்த்தி சிதம்பரத்தின் வேட்புமனுவை நாச்சியப்பன் எதிர்த்ததால், அவரது எண்ணத்தை மாற்றி பிரச்சாரத்திற்கு ஆதரவளித்தார் அதைப் போல, எம்.பி.-க்கு நெருக்கமான தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத் திறமைக்கு இணையாக ராகுல் காந்தி உட்பட எந்த காங்கிரஸ் தலைவரும் இருக்க முடியாது என்று கூறிய கார்த்திக்கிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நோட்டீஸ் அனுப்பியது.

கார்த்தி சிதம்பரம் தமிழ் செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைமையை மறைமுகமாக விமர்சித்தும், மோடியின் திறமைகளை கவனக்குறைவாகப் பாராட்டியும் தெரிவித்த கருத்துகள் கட்சியின் ஒழுக்கு நடவடிக்கைக் குழுவின் கோபத்தை ஈர்த்தது.

“ராகுலையும் காங்கிரஸ் தலைமையையும் விமர்சித்ததற்காக இந்த முறை கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என்று சிவகங்கையில் உள்ள கட்சிக்காரர்கள் உட்பட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எல்லா தலைவர்களும் தொண்டர்களும் கருதுகிறார்கள். அவர் சொன்னதை எந்த ஒரு காங்கிரஸ்காரரும் ஏற்க முடியாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒருவர் கூறினார். இந்த உணர்வு எம்.பி மீதான வெளிப்படையான அதிருப்தி மற்றும் கட்சியின் புகழ் மற்றும் ஒற்றுமையின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முந்தைய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு எதிராக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரத்தின் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய தலைமைக்கு அழுத்தம் கொடுக்க கட்சிக்குள் உள்ள ஒரு பிரிவினரின் முயற்சியை ஒருங்கிணைக்க நாச்சியப்பன் முயற்சி செய்கிறார் என்று காங்கிரஸ் உள்விவகாரங்கள் கூறுகின்றன.

இந்த உட்கட்சி எதிர்ப்பையும் மீறி, கட்சியின் சில உயர்மட்ட தலைவர்கள் கார்த்திக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறினர்.  “கடந்த காலங்களில் எதிர்ப்பு இருந்தது, ஆனால், இறுதியில் காங்கிரஸ் அதிகாரமட்டத்துக்குள் சிதம்பரம் குடும்பத்தின் நீடித்த செல்வாக்கு காரணமாக கட்சியின் உயர் மட்ட தலைமை இந்த எதிர்ப்புகளை மீறியதாக இருக்கும். ராகுல் காந்தி ஆதரவளிக்க மறுத்தாலும், சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் போன்ற மூத்த தலைவர்களின் ஆதரவுடன், இந்த முறையும் சிதம்பரம் தனது மகனின் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்க தனது செல்வாக்கைப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒரு மூத்த தலைவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

நாச்சியப்பன் சிவகங்கையில் போட்டியிட விரும்புவதால் உள்கட்சி பூசல் சிக்கலாக இருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “சிதம்பரத்தின் மீது மரியாதை இருந்த போதிலும், ராகுல் காந்தி கார்த்தியிடம் அவ்வளவு திருப்தியாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். நாச்சியப்பன் இந்தக் காட்சியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்” என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.

காங்கிரசின் கூட்டணிக் கட்சியான தி.மு.க-வின் நிலைப்பாடு மேலும் சிக்கல் தருவதாக உள்ளது, கார்த்தி சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கார்த்தி சிதம்பரம் மற்றும் நாச்சியப்பன் கருத்து தெரிவிக்க கிடைக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment