சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அதம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடந்ததைவிட இந்த ஆட்சியில் கொலைகள் குறைவாகவே உள்ளது என பேட்டியளித்தார்.
சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் சஞ்சய் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கொலை செய்வது என்பது தவறுதான் என்றாலும் தன்னை தாக்கவரும் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதில் எந்த தவறும் இல்லை என்றும் பேசியதுடன் எங்களை போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை என்கிற ஜான்பாண்டியனின் கருத்து குறித்த கேள்விக்கு அது அவரது சொந்த கருத்து என்றும் எங்களைபோன்ற தலைவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறோம் என தெரிவித்தார்.
தற்சமயம் தமிழகத்தில் உள்ள சட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த கேள்விக்கு தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொலைகளை கணக்கெடுத்து பாருங்கள் என்றும் அதனை விட இந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகள் என்பது குறைவுதான் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டமாக இருந்தாலும் அதனை பெருந்தன்மையுடன் ஆய்வு செய்து மேம்படுத்த முயற்சிக்கும் முதல்வரின் செயல் பாராட்டுக்கூரியது என பேசியதுடன் அண்ணாமலை மீது சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்தியாளர் சக்திசரவணக்குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“