/indian-express-tamil/media/media_files/2025/09/11/tn-congress-leader-selvaperunthagai-on-alliance-with-tvk-vijay-tamil-news-2025-09-11-21-10-16.jpeg)
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்து மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு திருச்சி காங்கிரஸ் கடசியினர் சார்பாக தலா ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
திருச்சி அருணாச்சலம் மன்றம் காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில், புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் சி.சிவசந்திரன், ஜி. சுப்பிரமணியன் ஆகியோருக்கு இன்று காங்கிரஸ் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக, தலா ஒரு லட்சத்திற்கான காசோலையினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் சு. திருநாவுக்கரசர் முன்னிலையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், கவுன்சிலர் எல். ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோவிந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கலை, முன்னாள் ராணுவத்தினர் அணி மாநிலத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/11/trichy-congress-donates-rs-1-lakh-each-to-family-of-martyr-killed-in-pulwama-attack-tamil-news-2025-09-11-21-06-30.jpeg)
இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, அகில இந்திய செயலாளர் கிரிஸ்டோபர் திலக், பாராளுமன்ற பொறுப்பாளர் பெனட் அந்தோணி ராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி, வழக்கறிஞர் சரவணன், கலைப் பிரிவு மாநில தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, பூக்கடை பன்னீர், மலைக்கோட்டை கோட்டத் தலைவர் வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் கோட்டத் தலைவர் தர்மேஷ் அகில், காட்டூர் கோட்டத் தலைவர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் கோட்டத் தலைவர் அழகர், சுப்ரமணியபுரம் கோட்டத் தலைவர் எட்வின், ஏர்போர்ட் கோட்டத் தலைவர் கனகராஜ், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், மகிளா காங்கிரஸ் சீலாசலஸ், கலைப்பிரிவு அருள், எஸ் சி பிரிவு கலியபெருமாள், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், இலக்கியப் பிரிவு பத்மநாபன், சுந்தர், ஜெயப்ரியா மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "விஜயை காங்கிரஸ் கூட்டணியில் இணைப்பது குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும். காங்கிரஸ் மீது குறை சொல்ல எதுவும் இல்லாததால் விஜய் எந்த குறையும் காங்கிரஸ் கட்சியின் மீது கூறவில்லை. துணை ஜனாதிபதி தேர்தலில் 12 பேர் மாற்றி வாக்களித்ததாக கூறுகிறார்கள், அது யார் என்பதை பத்திரிகையாளர்கள் தான் விளக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us