நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “சீமான் கடவுச் சீட்டு ஏன் முடக்கப்பட்டுள்ளது?
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எல்டிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தேசிய இனத்தின் மீது குத்தப்பட்ட அவமானம். இதனை செய்தது காங்கிரஸ்தான்.
ராஜிவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை. பொருளாதார நெருக்கடி காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, உணவுப் பொருள்கள் கூட வழங்க முடியவில்லை” என்றார்.
தொடர்ந்து, 60 ஆண்டுகள் நாட்டை சீரழித்துவிட்டனர் என்றார். மேலும் சீமானை எதிர்த்து பேசினால்தான் அவரை தலைவராக வைத்திருப்பார்கள் என கேஎஸ் அழகிரியை பார்த்து கூறினார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, “அவரை எதிர்த்து பேசினால்தான் தலைவர் பதவியில் நீடிப்பேன் எனக் கூறியுள்ளார். சீமான் யாரென்றே ராகுல் காந்திக்கு தெரியாது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“