தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று (ஜூலை 28) காலை நடை பயிற்சி சென்ற போது தவறி கீழே விழுந்ததில் நெற்றி, கால் முட்டியில் காயமடைந்து, மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வீடு திரும்பினார்.
Advertisment
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பவர் கே.எஸ். அழகிரி. இவர் நேற்று (28.07.2023) வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் நடை பயிற்சி சென்றுள்ளார். சிதம்பரம் அருகில் கீரப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நடை பயிற்சி சென்ற போது தவறி கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் கால்முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
Advertisment
Advertisement
இதனால் நேற்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் எல். இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“