Lok Sabha Election | Selvaperunthagai: நாளுமன்ற மக்களவை தேர்தல்கள் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தேசிய, மாநில அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறன்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. உடனான தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைமை பேசிக் கொண்டிருக்கிறது என்றும், தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தி.மு.க -காங்கிரஸ் பேச்சுவார்த்தை கசப்பு இல்லை இனிப்பாக உள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுடன் தி.மு.க.நிர்வாகிகள் தொலைப்பேசியில் பேசி வருகின்றனர். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை. தொகுதி பங்கீட்டில் வேறுபாடு இருந்தாலும் அனைவரும் இந்தியா கூட்டணியில்தான் இருப்போம்.
வெகு விரைவில் சுமுகமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். 40 தொகுதியையும் எங்களுடையதாக கருதி, தேர்தல் பணியாற்றுவோம். தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“